Advertisment
Presenting Partner
Desktop GIF

Vijay TV Serial; ஹேமா உயிருக்கு ஆபத்து… கண்ணம்மா தான் மருந்து…என்ன செய்ய போகிறான் பாரதி?

Vijay TV Serial barathikannamma today episode hema needs kannamma: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹேமா, காப்பாற்ற கண்ணம்மாவை கூட்டி வர செல்லும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமா உயிருக்கு ஆபத்து… கண்ணம்மா தான் மருந்து…என்ன செய்ய போகிறான் பாரதி?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ஹாஸ்பிட்டலில் ஹேமாவுக்கு டிரீட்மெண்ட் நடக்கிறது. ஹேமாவை நினைத்து அழுகிறான் பாரதி. உடனே சௌந்தர்யா, ஹேமாவோட நிலைக்கு நீதான் காரணம் என திட்டுகிறாள். அப்போது நர்ஸ் எதிர்பாரா விதமாக பாரதி மீது மோத, அம்மா என கத்துகிறான். அதற்கு சௌந்தர்யா இந்த வயசுலேயும் நீ அம்மானு கத்தும்போது, சின்ன குழந்தை அம்மாவுக்காக ஏங்க மாட்டாளா என கேட்கிறாள். அதற்கு பாரதி, ஹேமா சமையல் அம்மானு சொல்றதுதான் பிடிக்கல என்கிறான். மேலும், ஹேமாவுக்கு கண்ணம்மா தான் அம்மாவ என கேட்கிறான். அப்போது சௌந்தர்யா ஹேமா கண்ணம்மாவோட பொண்ணு தான் என சொல்ல, அதிர்ச்சியாகிறான் பாரதி.

அது எப்படி கண்ணம்மா ஹேமாவோட அம்மா ஆக முடியும் என பாரதி கேட்க, நீ எப்படி அப்பாவ இருக்கியோ அப்படி தான் என சொல்கிறாள் சௌந்தர்யா. மேலும், நீ எப்படி ஹேமா மேல பாசம் வச்சுருக்கியோ, கண்ணம்மாவும் அதே அளவும் பாசம் காட்டுவதால் தான் ஹேமா சமையல் அம்மானு கூப்பிடுற, ஆனா உண்மையிலே அம்மானு தான் கூப்பிடனும் என சொல்கிறாள். உடனே பாரதி இப்படியெல்லாம் சொல்லதிங்க என சொல்ல, உன்னால் ஹேமாவோட உண்மையான அம்மாவை கூட்டிட்டு வர முடியுமா என கேட்கிறார் வேணு. பாரதி முடியாது என தலையாட்ட, அப்ப ஹேமா கண்ணம்மா அம்மானு நினைச்ச என்ன தப்பு என கேட்கிறார் வேணு. ஹேமா உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும்போது இப்படி பேசாதிங்க, கண்ணம்மா என்னைக்குமே ஹேமாவுக்கு அம்மா ஆக முடியாது என சொல்கிறான் பாரதி.

publive-image

அடுத்ததாக, ஸ்கூலிலிருந்து வரும் லட்சுமி, கண்ணம்மாவிடம் வந்து அழுகிறாள். கண்ணம்மா காரணம் கேட்க, ஹேமா அமெரிக்கா போயிட்டாளாம் என அழுகிறாள் லட்சுமி. ஸ்கூலுக்கு வந்து என்னை பார்த்துட்டு போறதா சொன்னவ வரல என அழ, கண்ணம்மா அவளை மஞ்சு வீட்டுக்கு விளையாட அனுப்புகிறாள்.

அடுத்த, ஹாஸ்பிட்டலுக்கு வரும் வெண்பா, பாரதிக்கு ஆறுதல் சொல்கிறாள். வெண்பாவைப் பார்த்ததும் கோபமாகிறாள் சௌந்தர்யா. அப்போது வெளியே வரும் டாக்டர் பிரியா, ஹேமாவோட நிலைமை சரியில்லை என சொல்கிறாள். இதைக் கேட்டு எல்லோரும் அழ, மனதுக்குள் சந்தோஷமாகிறாள் வெண்பா. ஹேமாவோட நிலைமைக்கு நீதான் காரணம் என மீண்டும் பாரதியை திட்டுகிறாள் சௌந்தர்யா. மேலும், ஒருவேளை ஹேமாவுக்கு ஏதாவது ஆச்சு உன்ன கொலை கேஸ்ல ஜெயில் போட்டுருவேன் என மிரட்டுகிறாள்.

publive-image

பாரதி பிரியாவிடம் ஏதாவது பண்ணி பிரியாவ காப்பாத்திரு என கெஞ்சுகிறான். அப்போது டாக்டர் பிரியா, ஹேமாவ காப்பாத்த சமையல் அம்மா இங்க வரணும் என்கிறாள். மேலும், நீ போய் சமையல் அம்மா கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வா, அதான் ஹேமாவுக்கு மருந்து என சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் எல்லோரும், பாரதியை போய் கண்ணம்மாவை கூட்டி வர வற்புறுத்துகிறார்கள். பாரதி அமைதியாக இருக்க, வெண்பா கண்ணம்மா மேல பாரதிக்கு கோபம் இருக்கு என தூண்டிவிடுகிறாள். உடனே சௌந்தர்யா நீ வாயை மூடு என வெண்பாவை திட்டுகிறாள். பின்னர் எல்லோரும் பாரதியிடம் கெஞ்ச, கண்ணம்மாவை கூட்டி வர கிளம்புகிறான் பாரதி. வெண்பாவும் கூட கிளம்ப, வெண்பாவை தடுக்கிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment