Vijay TV serial; ஹேமா மீண்டும் கடத்தலா? … குழந்தைக்காக உயிரை பணயம் வைக்கும் அஞ்சலி

Vijay TV serial barathikannamma today episode lakshmi meets hema: ஹேமாவை காணாமல் பதற்றமாகும் பாரதி, ஹேமாவை பார்க்க கிளம்பும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

உயிருக்கு ஆபத்து என குழந்தையை கலைக்க டாக்டர் அட்வைஸ் பண்ண, இது 8 வருஷ கனவு, நா கண்டிப்பா குழந்தையை பெற்றுக்கொள்வேன் என்கிறாள் அஞ்சலி. அஞ்சலிக்கு மீண்டும் குழந்தையை அபார்ட் பண்ண வற்புறுத்துகிறார் டாக்டர். ஆனால் மறுத்தவாறே கிளம்புகிறாள் அஞ்சலி.

அடுத்து, நமக்கு குழந்தை பிறந்த பின், ஒவ்வொரு நாளும் வீடியோ எடுத்து வெளியிடுவோம் என்கிறான் அகில். எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் அஞ்சலி. பின்னர் அகில், பாரதியும் ஹேமாவும் அமெரிக்கா போறதால, நம்ம குழந்தை வந்தா தான் வீட்டுல எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கும் என நெகிழ்வாக பேசுகிறான் அகில்.

அடுத்ததாக, அமெரிக்கா போறத நினைச்சு ஹேமா கவலையா இருக்கா என சௌந்தர்யாவும் வேணுவும் பேசிக் கொள்கிறார்கள். மேலும், பாரதி இப்படி மாறியதை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.  அடுத்து, ஹேமாவை தேடி அவளது ரூமுக்கு வரும் பாரதி, ஹேமா இல்லாததால் பதற்றமடைகிறான். பின்னர் சௌந்தர்யாவிடம் ஹேமா எங்க என சந்தேகமா கேட்கிறான். ஆனால், சௌந்தர்யா நா கண்ணம்மா வீட்டுல கொண்டு போய் விடல என்கிறாள். பின்னர் எல்லோரும் சேர்ந்து ஹேமாவை தேடுகிறார்கள்.

வீடு முழுவதும் தேடியும் ஹேமா கிடைக்காததால், பாரதி கண்ணம்மாகிட்ட கேட்க சொல்றான். ஆனால் கண்ணம்மா போன் ஆஃப் ஆகி இருப்பதால் மேலும் பதற்றமடைகிறார்கள். பின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட, தோட்டத்தில் தனியாக அமர்ந்திருக்கும் ஹேமாவை பார்க்கிறார் வேணு. ஏன் இங்க இருக்க என பாரதி கேட்க, அமெரிக்கா போன பின்னாடி நான் தனியா தானே இருக்கணும் என்கிறாள் ஹேமா. ஹேமாவை நினைத்து எல்லோரும் வருத்தப்பட, ஆறுதல் சொல்கிறான் பாரதி.

அடுத்ததாக, பிஸினஸை எப்படி டெவலப் செய்து பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள், சுமதியும், கண்ணம்மாவும். அப்போது அங்கு வரும் லட்சுமி, ஹேமா வீட்டுக்கு போகனும் என்கிறாள். ஏன் இப்ப திடீர்னு கேட்குற என கண்ணம்மா கேட்க, அவ அமெரிக்கா போகப் போறா அதான் இப்ப பார்க்கணும் என்கிறாள். அதற்கு கண்ணம்மா, நினைச்ச நேரத்துக்கெல்லாம் பார்க்க முடியாது, ஹேமா மறக்க பழகிக்க என்கிறாள் லட்சுமி. ஆனால் விடாப்பிடியாக, லட்சுமி கேட்க, சம்மதிக்கிறாள் கண்ணம்மா. உடனே லட்சுமி, ஹேமாவுக்கு பிடிச்ச ஏதாவது சாப்பாடு செஞ்சு கொடு என கேட்கிறாள். கண்ணம்மாவும் செய்து கொடுக்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial barathikannamma today episode lakshmi meets hema

Next Story
குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? பிரபலம் கொடுத்த புது தகவல்!Cooku with Comali latest update: chef venkatesh bhat reveals about cwc season 3 schedule
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X