New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/barathikannamma-jul-8-epi.jpg)
Vijay TV serial barathikannamma today episode shock news for anjali: ஹேமாவ அமெரிக்க கூட்டி போகாதே என பாரதியிடம் கெஞ்சும் சௌந்தர்யா, அஞ்சலிக்கு அதிர்ச்சியான செய்தியை சொல்லும் டாக்டர் இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹேமாவிடம், உன்னோட அம்மா சாமிக்கிட்ட போயிட்ட என பாரதி சொல்ல அதிர்ச்சியாகிறாள் சௌந்தர்யா. ஹேமா அம்மாவ இனி பார்க்க முடியாத என அழுகிறாள். உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான்தான் என ஹேமாவை ஆறுதல் படுத்துகிறான் பாரதி. எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து கிளம்புகிறாள் சௌந்தர்யா.
அடுத்து, லட்சுமி படித்துக் கொண்டிருப்பதை ஆசையாக பார்க்கிறாள் கண்ணம்மா. அப்போது அங்கு வரும் துளசியிடம், ஏன் லேட் என கண்ணம்மா கேட்க, ஹாஸ்பிட்டலில் வேலை அதிகம் இருந்ததால், லேட் ஆயிடுச்சு என சொல்கிறாள். அடுத்து, அங்கு வரும் சுமதி, மாவு பிஸினஸில் உள்ள பிரச்சனை பற்றி கூறுகிறாள். அப்போது, அங்கு வரும் ஒரு பாட்டி, தனக்கு மாவு வேணும் என்றும், கண்ணம்மாவை புகழ்ந்தும் பேசுகிறாள்.
அடுத்ததாக, பாரதியிடம் வந்து நல்லா நடிப்பதாக கூறுகிறாள் சௌந்தர்யா. நீங்க தான் பொய்யா சொல்லிக்கிட்டு இருக்கீங்க என கோபப்படுகிறான் பாரதி. நீங்க நல்லா இருக்கணும்னு தான் பொய் சொன்னேன், ஆனா நீ உயிரோட இருக்கையிலே செத்துட்டானு பொய் சொல்ற என பாரதியை திட்டுகிறாள் சௌந்தர்யா. மேலும் டாக்டரா நாகரீகமா நடந்துக்க என சொல்ல, நான் அமெரிக்கா போனதுக்கு அப்புறம் நிம்மதியா இருங்க என சொல்கிறான் பாரதி. நீ ரொம்ப மாறிட்ட என சௌந்தர்யா சொல்ல, நீங்கதான் என்னை அப்படி மாத்திட்டிங்க என அழுகிறான்.
ஹேமா, சமையல் அம்மா கூட பழகுறது என பிடிக்கல என சொல்லும் பாரதி, நாளைக்கு கண்ணம்மாவ ஹேமாவோட அம்மானு சொன்னாலும் சொல்வீங்க, அதனால தான் ஹேமாகிட்ட அம்மா செத்து போயிட்டானு சொன்னேன் என சொல்கிறான். நா ஹேமா மேல இருக்குற அக்கறையில தான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், கண்ணம்மாவ உனக்கு பிடிக்கலனா என்ன? ஹேமாவ பத்தி யோசி என கெஞ்சுகிறாள் சௌந்தர்யா. மேலும் கண்ணம்மாகிட்ட இருந்து ஹேமாவ விலக்கிவைக்கிறேன் என சௌந்தர்யா சொல்ல, நா அத நம்பமாட்டேன், கண்டிப்பா நா ஹேமாவ அமெரிக்கா கூட்டிட்டு போய் அவள மாத்திருவேன் என சொல்கிறான் பாரதி.
அடுத்ததாக, ஹாஸ்பிட்டலில் அஞ்சலியிடம், உங்க கணவர்கிட்ட நான் தனியா பேசணும், அவர கூப்பிடுங்க என டாக்டர் சொல்ல, அஞ்சலி எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க, என கேட்கிறாள். உன்னோட இதயம் ரொம்ப பலகீனமா இருக்கு, குழந்தை வளர வளர இதயம் பலகீனமா போயிடும், என்கிறார் டாக்டர். மேலும், குழந்தை ஆரோக்கியமா பொறந்தாலும், உன்னோட உயிருக்கு ஆபத்து இருக்கு, அதனால இந்த குழந்தைய அபார்ட் பண்றதுதான் நல்லது என்கிறார் டாக்டர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் அஞ்சலி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.