vijay tv serial bharathi kannamma tamil serial :விஜய் டிவி-யில் இன்று இரவு 8.30 மணிக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்றைய எபிசோடை பார்க்க இருப்பவர்கள் கண்டிப்பாக கடுப்பாவார்கள். காரணம், வெண்பாவின் அடுத்த சதிக்கு பலியாகும் பாவப்பட்ட டாக்டர் பாரதி.
கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
vijay tv serial bharathi kannamma tamil serial : பாவம் பாரதி!
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா.
இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள் வெண்பா. உனக்கு குழந்தை பிறக்காது பாரதி என மீண்டும் மீண்டும் சொல்கிறாள். கொரோனாவுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல் இதோடு முடிந்தது.
கொரோனாவுக்கு பின்பு பாரதி, மாஸாக வெண்பாவுக்கு பதில் கூறி தெறிக்க விட்டார். இப்போது மீண்டும் வெண்பாவின் சதிக்கு பலியாக போகிறான். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “எனக்கு எந்த குறையும் இல்லன்னு டெஸ்ட் எடுத்து நிரூபிச்சி அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டா உன் மூஞ்சி மேல் தூக்கி எறிவேன் பாருன்னு “ ஆக்ரோஷத்தில் கத்துக்கிறான்.
சொல்லிவச்ச மாறியே வெண்பாவுக்கு தெரிந்த ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுக்குறான். அங்கையும் பகடை உருட்ட வரும் வெண்பா, மறுபடியும் பாரதியின் டெஸ்ட் ரிசல்ட்ட மாத்த , திரும்பவும் பாரதி ஏமாற்றம் அடைகிறான். வெண்பா சந்தோஷத்தில குதிக்கிறாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil