பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன்.ஜி எழுதி, இயக்கி மற்றும் தயாரிக்கப்பட்ட திரைப்படம் திரௌபதி. சாதியை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்ததால் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கூட்டுத் தயாரிப்பு (crowd funding) மூலம் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகவும் திரௌபதி விளங்கியது.
மோகன். ஜி ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிசி கதாநாயகனாக நடிக்கின்றனர்.
இந்நிலையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக, விஜய் டிவி பிரபலம் தர்ஷாகுப்தா அறிமுகம் ஆகிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தர்ஷாகுப்தா, சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய “முள்ளும் மலரும்” சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய “மின்னலே” , விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்திலும் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இது தொடர்பாக தர்ஷாகுப்தா தனது இன்ச்டாகிராம் பக்கத்தில், ” இயக்குனர் மோகன்.ஜி இயக்கம் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளேன். இது, உங்கள் அன்பால் மட்டுமே சாத்தியம் ஆனது. நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று பதிவிட்டார்.