Advertisment
Presenting Partner
Desktop GIF

சிறகடிக்க ஆசையில் சீரியலில் கே.ஆர். வியா நடிக்க உள்ளாரா? உண்மை என்ன?

விஜய் டி.வி டி.ஆர்.பியில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
savaz

விஜய் டி.வி டி.ஆர்.பியில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது. 
எண்பதாவது பிறந்த நாளில் தனக்கு  என்ன பிடிக்கும்  என்பதை தெரிந்து யார் பரிசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நான் ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கப் போகிறேன் என்று நாச்சியார்  பாட்டியும் சொல்லி இருக்கிறார். 
இதனால் வீட்டில் எல்லோரும் என்ன கிப் கொடுக்கலாம்  என்று யோசனையில் இருக்கிறார்கள். மனோஜ் மற்றும் ரோகினி சின்ன வயசில் பாட்டியின் நவரத்தின  மாலை தொலைந்து போய்விட்டதால் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க பண்ணாங்க  அதனால் இப்ப  ஒரு நவரத்தின  மாலை வாங்கி கொத்துவிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். 
விஜயா தனது தோழியின் வீட்டில் இருக்கும் டிவியை கொண்டு வந்து கொடுக்கலாம் என்று முடிவு செய்கிறார். இப்படி அனைவரும் என்ன பரிசு கொடுக்கலாம் என்று  யோசிக்கின்றனர். 
இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து புகைப்படம் ஒன்றை ஒந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீ தேவா வெளியிட்டு இருக்கிறார்.  இதை பகிர்ந்த ஸ்ரீ தேவா, “ என் பள்ளி பருவத்தில் பலமுறை என் அம்மாவுடன் சேர்ந்த நல்ல நேரம் திரைப்படம் மற்றும் ஜீம்பூபா, பட்டணத்தில் பூதம்  பலமுறை பாத்திருக்கிறேன். அந்த திரைப்படத்தின் கதாநாயகி அம்மா மூத்த  நடிகை கே.ஆர் விஜயா அவர்கள் நம் சிறகடிக்க  ஆசை படபிடிப்பு தளத்தில் இன்று நான் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் வகை தந்தார். அவரை நேரில் சந்தித்த நிமிடம் என் மனத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய பாதம் தொட்டு வணங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வடிவுகரசி இந்த புகைப்படத்தில் இருக்கிறார். 
இந்நிலையில் இவர்கள் எப்போது வருவார்கள், அதில் என்ன கதை இருக்கிறது என்பதை நாம் அனைவரும் சீரியலில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment