Vijay TV serial news: சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல்களாகவும், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் உள்ளன. இரு வேறு கதைக்களங்களை கொண்ட இந்த சீரியல்களை ஒரே இயக்குநர் தான் இயக்கி வருகிறார்.
எனவே, இந்த இரு சீரியல்களில் வரும் முக்கிய காதாப்பாத்திரங்கள் சந்தித்து கொள்வது போல கதை அமைக்கப்பட்டும், படம் பிடிக்கப்பட்டும், இரு சீரியல்களின் ‘மஹாசங்கமம்’ என்ற பெயரில் ஒன்றாக ஒளிபரப்பாகின. அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த 2 சீரியல்களில் வரும் காதாப்பாத்திரங்கள் ஒன்றாக ஓர் இடத்தில் சங்கமிக்கும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அவை இந்த வார எபிசோட்களாக ஒளிபரப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஒரு உணவு விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு சீரியல்களின் காதாப்பாத்திரங்கள் முதலில் மோதலில் ஆரம்பித்து, பின்னர் சிரித்து பேசி மகிழ்கின்றனர். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)