ஏதோ திட்டம் இருக்கு… கண்ணம்மா ஹஸ்பண்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ன வேலை?

Pandian stores mullai Kavya takes selfie with Bharathi Kannama Bharathi arun in shooting spot Tamil News: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

Pandian stores mullai Kavya takes selfie with Bharathi Kannama Bharathi arun in shooting spot Tamil News: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

author-image
WebDesk
New Update
Vijay tv serial news in tamil: Bharathi meets mullai at Pandian stores shooting spot

Vijay tv serial news in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற சீரியல்களாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக டி.ஆர்.பி-யில் டாப் இடங்களை தக்க வைத்து வரும் இந்த சீரியல்கள் பல தரப்பினரையும் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, இந்த சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் தனம், மீனா, முல்லை ரோலில் நடிக்கும் காவ்யா, சாய் காயத்ரி, கதிராக நடிக்கும் குமரன் போன்றோருக்கும், பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத், அஞ்சலியாக நடித்த ஸ்வீட்டி, கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி போன்றோரையும் சமூக வலைதள பக்கங்களில் பல லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து (ஃபாலோ) வருகிறார்கள்.

publive-image

முன்னதாக பாரதி கண்ணம்மா - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அப்போது, இந்த இரு சீரியல்களில் நடித்த நடிகர், நடிகைகள் ஓரிடத்தில் சங்கமித்து இருந்தனர். இதனால், சீரியல்களில் பல திருப்பங்கள் அரங்கேறி இருந்தன.

Advertisment
Advertisements
publive-image

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாரதி கண்ணம்மா அருண் பிரசாத் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அவை ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் முல்லையாக நடிக்கும் காவ்யா பாரதியுடன் செல்பி எடுத்துக் கொண்டதும், மூர்த்தி - தனத்தின் குழந்தை பாண்டியனை பாரதி தூக்கி வைத்திருப்பதும் போல் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவ்யா ஏற்கெனவே 'அறிவு' என்கிற கதாபாத்திரத்தில் பாரதியின் தங்கையாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிஸியாக நடித்து வந்ததால், அறிவு கதாபாத்திரத்தில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது முல்லை பாரதியுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துள்ள நிலையில், மீண்டும் பாரதி கண்ணம்மா - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மகா சங்கமம் நிகழ உள்ளதா? அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் அரங்கேற உள்ளன? என்பது போன்ற பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Tamil Serial News Bharathi Kannamma Serial Pandian Stores Serial Tamil Serial Update Vijay Tv Serial 2 Vijaytv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: