Vijay tv serial Pandian Stores Kathir Mullai romantic conversation : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே...ஏன் சின்ன ராசா என்று பாடாத குறையாக முல்லை கதிரை நினைத்து பூ கட்டிக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து கதிர் வந்துவிடுகிறான். அவசரமாக முல்லை எழுந்து நிற்கிறாள். என்ன என்று இவன் கேட்க, ஒண்ணும் இல்லைங்க என்று முல்லை சொல்ல, என்ன ரெண்டு பேரும் இப்படி நிக்கறீங்க என்று கேட்டபடி. திடீரென்று வந்துவிட்டான் கண்ணன். திடுக்கிட்டு இருவரும் தள்ளி நின்று கொண்டனர். ஏண்டா கடைக்கு போகலையா என்று கேட்டு கண்ணனை துரத்துகிறான் கதிர். போறேன்.. போறேன்..ஆனா என்னவோ நடக்குது.. இதெல்லாம் சரியில்லை என்று ஒன்றும் புரியாதவனாக ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு போகிறான்.
கையில் பூவை வைத்துக்கொண்டு முல்லை நிற்கிறாள். மெதுவாக அவள் அருகில் வருகிறான் கதிர். இவள் அப்படியே நிற்க, கையை அவளருகில் கொண்டு போகிறான். அவள் கன்னத்தை புடிச்சு கிள்ளப் போறாகளோ என்று இவள் நினைக்க. அவனுக்கு அதே ஆசைதான். கொழுக் மொழுக்கென்று இருக்கும் முல்லையின் கன்னத்தை கிள்ளிப் பார்க்க வேண்டும் என்று. ஆனால், அவளது தோளில் படர்ந்து இருக்கும் பூவின் ஒரு இதழை எடுத்து விடுகிறான் கதிர். சப்புன்னு ஆகிப்போச்சு காட்சி. ஏங்க என்று எதோ கேட்க போனவள், என்ன சொல்லு என்று கதிர் கேட்டவுடன். ஒண்ணும் இல்லைங்க என்று சொல்லிவிட்டாள். என்ன சொல்லு என்று மறுபடியும் அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை தெரிந்துக்கொள்ள கேட்கிறான். இல்லை..டீ தரவான்னு கேட்கிறாள். எப்போ பார்த்தாலும் டீ தானா என்று இவன் சலிச்சுக்க.. இல்லை உங்களுக்கு டீ புடிக்குமே என்று இழுக்கிறான். ஆமா .. டீ மட்டும்தான் புடிக்கும்.. இவ ஒருத்தி என்று சொல்லிக்கொள்கிறான்.
முல்லை தனது போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, உட்கார்ந்து எம்புட்டு வேலை பார்த்து இருக்காக... கலர் பண்ணி இருக்காக.. போட்டோவை கட் பண்ணி போட்டு இருக்காக...இவுக இப்படி எல்லாம் செய்வாகன்னு நான் நினைச்சு கூட பார்க்கலைன்னு சொல்லிகிட்டே, இந்த போட்டோவை சரியான இடத்துல மாட்டணும்னு எழுந்துக்கறா. முல்லை உனக்கான இடம் இதுதான்னு மாட்ட போகையில் கதிர் வந்துவிடுகிறான். போட்டோ தவறி விழப்போக, அதை இவளும் பிடிக்க, அவனும் பிடிக்க... என்ன அவன் கை இவள் கை மேல இருக்கிறது. இப்போ என்ன இருவருக்குள்ளும் காதல் இசை.. சரி என்று போட்டோவை மாட்டிவிட்டு, எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றால், இருவர் தோள்களும் உரசிக்கொள்கிறன. இப்போதும் மங்கள வாத்திய இசை.காதல் காதல் காதல் என்றே முல்லை கதிரின் திருமண வாழ்க்கை இப்போதைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil