Pandian Stores Episode Update : அம்மாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு கிளம்பும் மூர்த்தி, தனியாக நிற்கும் கண்ணனை ஏக்கத்துடன் பார்க்கிறான். ஆனால் ஜனார்த்தன் ஏறுங்க மூர்த்தி போலாம் என்று சொல்கிறான். அதன்பிறகு தம்பியை பார்த்தவாறு மூர்த்தி கதிர் ஜீவா மூவரும் காரில் ஏறி கிளம்புகின்றனர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்து லட்சுமி அஸ்தியை வைத்து சடங்குகள் செய்கின்றனர்.
அப்போது ஐஸ்வர்யாவுடன் கண்ணன் அங்கு வருகிறான். அவன் மொட்டை அடித்திருப்பதை பார்த்து தனம் முல்லை மீனா மூவரும் அதிர்ச்சியாகின்றனர். அதன்பிறகு மூர்த்தி ஜீவா கதிர் மூவரும் லக்ஷ்மி ம்ம்மாவின் அஸ்தியை தொட்டு கும்பிடுகின்றனர். அப்போது மூர்த்தி முருகனிடம் யாராவது அம்மா அஸ்தியை கும்பிடனும் நினைச்சா, வந்து கும்பிட்டு போக சொல்லுங்க என்கிறான். அதனை தொடர்ந்து முருகன் கண்ணனிடம் சொல்கிறான். அவன் அம்மா அஸ்தியை தொட்டு கும்பிடும்போது, கஸ்தூரி அவனை தடுக்க முயல்கிறாள். ஆனால் தனம் அவனை எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணி என சைகை காட்டுகிறாள்.
அதன்பிறகு அஸ்தியை எடுத்துக்கொண்டு கரைக்க செல்கின்றனர். அப்போது கண்ணனும் கிளம்ப, அவனை விட்டுவிட்டு காரில் செல்கின்றனர். ஆனாலும் அவன் பின்னாடியே நடந்து செல்கிறான். அவன் வருவதற்குள் அஸ்தியை எடுத்து கொண்டு அண்ணன்கள் ஆற்றில் இறங்கி கரைத்து விடுகின்றனர். அவன் ஓரமாக நின்னு பார்க்கிறான். அப்போது முருகன் ஜனார்த்தனனிடம் கண்ணனை பற்றி சொல்ல அவனாலதான் இவ்ளோ பிரச்சனையும் என்று சொல்கிறான். ஜெகாவும் அதேமாதிரி சொல்ல முருகன் அமைதியாகிறான்
இதனிடையே அஸ்தியை கரைத்து விட்டு அவர்கள் வரும்போது, அண்ணன்கள் தன்னை கூப்பிட மாட்டார்களா என ஏக்கமாக பார்க்கிறான் கண்ணன். மேலும் அம்மா இறந்ததே எனக்கு பெரிய தண்டனை அண்ணன். அனாதை மாதிரி நிக்குறேன். நீங்களும் என்னை விட்டுட்டு போயிராதீங்க என மனதிற்குள்ளே நினைக்கிறேன். அவனை சோகமாக பார்க்கும் மூர்த்தி எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறான். ஜீவாவும், கதிரும் அவனுடனே சென்று விடுகின்றனர்.
இதற்கிடையில் வீட்டில் தனம் இறப்பதற்கு முன்பாக இந்த குடும்பத்தை பார்த்துக்கோ என சொல்லிவிட்டு போனதை மனதில் நினைத்து பார்க்கிறாள். அதனைப்பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லி அழுகிறாள். அப்போது அவள் அம்மா, சில பேருக்குலாம் அப்படிதான் முன்னாடியே தெரியும் நம்ம சாக போறோம்ன்னு என சொல்கிறாள். தனம் அதையே நினைத்து கவலைப்படுகிறாள் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil