Advertisment

சங்கமம் எதற்கு? கண்ணம்மாவை ரிப்பீட் பண்ணலாமே?

Fans reaction after Bharathi Kannamma and Raja Rani 2 telecasted as Mahasangamam Tamil News: தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் ‘மஹாசங்கமம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அவற்றுக்கு பதில் பழைய எபிசோடுகளை ஒளிபரப்பலாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
VIJAY TV Serial Tamil News: fans got upset after Bharathi Kannamma and Raja Rani 2 telecasted as Mahasangamam

Vijay TV serial news: சின்னத்திரையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரியல்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் உள்ளன. இரு வேறு கதைக்களங்களை கொண்ட இந்த சீரியல்களை ஒரே இயக்குநர் தான் இயக்கி வருகிறார். ஏற்கனவே, இந்த இரு சீரியல்களில் வரும் முக்கிய காதாப்பாத்திரங்கள் சந்தித்து கொள்வது போல கதை அமைக்கப்பட்டும், படம் பிடிக்கப்பட்டும், 'சிறப்பு மெகா சங்கமம்' என்ற பெயரில் ஒன்றாக ஒளிபரப்பப்பட்டும் வந்தது.

Advertisment

இந்த நிலையில், மீண்டும் இந்த 2 சீரியல்களில் வரும் காதாப்பாத்திரங்கள் ஒன்றாக ஓர் இடத்தில் சங்கமிக்கும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அவை இந்த வார எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகிறன்றன.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக அனைத்து சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டன. எனவே சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகள் ஹிட் சீரியல்களின் பழைய எபிசோடுகளை கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் 'சிறப்பு மெகா சங்கமம்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளதால், அவற்றுக்கு பதில் பழைய எபிசோடுகளை ஒளிபரப்பலாம் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த அன்பான வேண்டுகோளுக்கு அந்த தொலைக்காட்சி செவிமெடுக்குமா? பழைய பாரதி கண்ணம்மா எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Vijay Tv Bharathi Kannamma Serial Vijaytv Serial Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment