Vijay TV serial Actress Raveena Daha: சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் ரவீனா தாஹா ’கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ’ராட்சசன்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தவிர, ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார்.
முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ’பூவே பூச்சூடவா’ எனும் சீரியலில் நடித்து வந்த ரவீனா தாஹா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பதோடு, டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 போன்ற நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
தற்போது சமூக வலைதள பக்கங்களில் தன்னை பிசியாக வைத்துக்கொள்ளும் இவர், இன்ஸ்டா பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் ஹாட் ட்ரெண்டி உடையில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் ஹார்டியன்களை பறக்க விடுகின்றனர்.
இது தவிர, ட்ரெண்டியான உடைகளை அணிந்து அதிக ஹாட்டாக குத்தாட்டம் போடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களுக்கு லைக்ஸ் மழை பொழியும் அவரது ரசிகர்கள் ருசிகர கமெண்டுகளை தட்டிச் செல்கின்றனர்.
ரவீனாவின் இந்த குத்தாட்ட வீடியோவிற்கு கமெண்ட் செய்து ரசிகர் ஒருவர் 'என்ன சிம்ரன் இதெல்லாம்' என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“