Vijay TV serial news, Vijay TV serial tamil news, விஜய் டிவி, விஜய் டிவி நாடகம், விஜய் டிவி சீரியல்
Vijay TV Naam Iruvar Namakku Iruvar Serial: ‘பெரிய வீடா பார்த்து போலாம்னு இங்கே கூட்டிட்டு வந்தார் உங்க அப்பா... இங்கே வந்தா சின்ன அத்தை சின்ன வீடா...’ என்று மாயன் இழுக்க, ‘டேய்..!’ என்று தேவி அதட்டுகிறாள். உங்க கிட்ட ஒரு டவுட்டு கேட்கணும்ங்க.. என்று சேரில் உட்கார்ந்து இருக்கும் தேவியின் அருகில் வருகிறான் மாயன். தேவி குழப்பமாக என்னடா என்று கேட்கிறாள். இல்லை..பக்கத்து பக்கத்துல வசதியா ரூம் பார்த்து செட்டில் பண்ணி குடுத்துட்டாரே நம்ம சான்டில் பாண்டியன்... எனக் கேட்க, தேவி முறைக்கிறாள்.
சாரிங்க.. அதான் நம்ம மாமா.. உங்க டாடி ராத்திரி எந்த ரூமில் தங்கி இருந்தார்னு உங்களுக்கு தெரியுமா என்று மதுரைக்காரனுக்கே உண்டான குசும்பு தனத்தில் மாமனாரை கலாய்த்து கேட்கிறான். தேவி முறைக்க.. உங்களுக்கு புரியலையா? நம்ம எல்லாரையும் பெரிய வீடு பார்த்து கூட்டிட்டு வரேன்னு அழைச்சுட்டு வந்தாருல்லே.. மாமா என்று கேட்கிறான் மாயன். ஆமாம் என்று தேவி சொல்ல, பெரிய அத்தை அந்த ரூமில் தங்கி இருந்தாங்க என்று கேட்கிறான்.
Advertisment
Advertisements
ஆமாம் என்று மறுபடியும் தேவி சொல்ல... சின்ன அத்தை இந்த ரூமில் அதான் பெரிய அத்தைக்கு பக்கத்து ரூமில் தங்கி இருந்தாங்க என்று சொல்கிறான். ஆமாம் என்று தேவி மறுபடியும் சொல்கிறாள். இதுலதாங்க எனக்கு ஒரு டவுட்டு.. அப்போ உங்க டாடி எந்த ரூமில் தங்கி இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியுமா என்று என்னவோ பெரிய விஷயத்தை தெரிந்துகொள்வதை தவற விட்டவன் போல ஒரு ஃபீலிங்கில் கேட்கிறான் மாயன்.
தேவி முகம் எல்லாம் வெட்கத்தில் சிவக்க, கொஞ்சம் கோபப்பட்டு டேய் கொன்றுவேன்.. போயிரு என்று மிரட்டுகிறாள். கலாய்க்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதில் மாமனாரை விட்டு வைப்பதா என்ன... புது வீடு.. புது பொண்டாட்டி.. கலக்குறீங்க சான்டில் பாண்டியன் என்று தேவியிடமே கலாயக்கிறான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"