அடுத்த புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி : மீண்டும் எண்ட்ரி ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

vijay tv Launching new serial Namma Vettu Ponnu Tamil News: விஜய் டிவியில் புதிய சீரியல் ஒளிபரப்ப உள்ள நிலையில் அந்த சீரியலுக்கு ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Vijay TV serial tamil news: serial actress vaishali acting in vijay tv’s new serial

Vijay TV serial tamil news: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப் புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முதன்மையான தொலைக்காட்சியான வலம் வரும் விஜய் தற்போது டிவி புதிய சீரியல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் கூட தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் இணைந்து நடிக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியலை விஜய் டிவி ஒளிபரப்ப துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி புதியதாக மற்றொரு சீரியலை ஒளிபரப்ப முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்த சீரியல் குறித்த சுவாரஷ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புத்தம் புதிய நெடுந்தொடருக்கு ‘நம்ம வீட்டு பொண்ணு’ என பெயரிட்டு உள்ளனராம். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலி நடிக்க உள்ளாராம்.

இந்த சீரியல் மூலம் நடிகை வைஷாலி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை விஜய் டிவியின் ஃபிக்சன் டீம் விரைவில் வெளியிடும் என விரைவில் எதிர்பார்க்கலாம்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Web Title: Vijay tv serial tamil news serial actress vaishali acting in vijay tvs new serial

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com