சூர்யாவுடன் ஸ்ருதி… அப்பாவுக்கு கால் செய்து கேட்ட கேள்விய பாருங்க!

அப்பா எனக்கு ஜெனரல் நாலட்ஜ் கம்மியா இருக்குப்பா என்று சொல்லி ஒரு கேள்விக்கு பதில் வேணும் என்றார்.

By: Updated: July 13, 2020, 02:25:45 PM

vijay tv show neengalum vellalam suriya : நடிகர் சூர்யா விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ரியாலிட்டி ஷோவில் ஸ்ருதி ஹாசன் பங்குபெற்ற எபிசோட் தற்போது வைரலாகி வருகிறது. சுப்ரமணிய பாரதி 1921ம் ஆண்டு எந்த கோயிலின் யானையால் தாக்கப்பட்டார் என்பது சூர்யா கேட்ட கேள்வி. இதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்று நான்கு ஆப்ஷன்ஸ் வழங்கப்பட்டது. இதற்கு ஸ்ரீரங்கமா இருக்கும் என்று முதலில் சந்தேகமாக கூறினார் ஸ்ருதி. பிறகு ஜெனரல் நாலட்ஜ் ரொம்ப கம்மியா இருக்கு என்று, பார்ப்பவர்கள் ரொம்ப இல்லமா ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு என்று சொல்லும்படி தன்னடக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

ஹெல்ப் லைனில் வந்த அப்பாவிடம், அப்பா எனக்கு ஜெனரல் நாலட்ஜ் கம்மியா இருக்குப்பா என்று சொல்லி ஒரு கேள்விக்கு பதில் வேணும்..இதுக்கான பதில் கண்டிப்பா உங்களுக்கு தெரியும்ப்பா என்று சுருதி சொல்ல, . கணக்கு, பிஸிக்ஸ் எதுவும் கேட்டுட கூடாது. அது தெரியாததால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு சொன்னார். மேத்ஸ் இல்லைப்பா என்று ஸ்ருதி சொல்ல, தெரிஞ்சா சொல்றேன்..இல்லேன்னா கண்டிப்பா தோல்வியை ஒப்புக்கறேன்னு கமல் சொன்னார், .செட்டே கலகலத்தது. கேள்வியை சூர்யா வாசித்தார். கமல்ஹாசன், சில வீடுகளில் பிள்ளைகளுக்கு ஒரு பேரோட நிறுத்தாம, ரெண்டு மூணு பேர் வைப்பாங்க. எனக்கு அப்படி வச்ச ஒரு பேர் பார்த்தசாரதி. என்னை எங்கம்மா திட்டணும்னு நினைச்சா டேய் பார்த்தசாரதி இங்கே வாடான்னு கூப்பிடுவாங்க…ஆப்ஷனே வேண்டாம்.. திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் என்று கூறினார்.

யானை மோதி தமிழ் செத்ததுன்னு என் நண்பர் ஒருத்தர் எழுதி இருந்தார். மறக்க முடியாத ஒரு தினம் அது..எங்கய்யா பாரதி இறந்த தினம். அந்த சிங்கத்தையே பிடரி பிடித்து உலுக்கிய கவிஞன். அந்த இறப்பு பற்றி இன்னொரு கவிஞர், என் பாரதியை மோதியதால்தான் உன்னை பார்க்கும் போதெல்லாம் தெருவில் பிச்சை எடுக்கிறாய் யானையே என்று எழுதி இருந்தார் . பாரதி யானை மோதி எல்லாம் இறக்கவில்லை.. யானை மோதி பிழைத்தார் என்று கூறினார் கமல்ஹாசன். பாரதி கவிதைகளில் உங்களுக்கு பிடித்த வரிகள் சார் என்று சூர்யா கேட்க, தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று உடனடியாக கூறினார் உலகநாயகன்.

20 லட்சத்துக்கு மேல் வங்கி சேவிங்ஸில் இருக்கா? புதிய ரூல்ஸ் வந்தாச்சி ஜாக்கிரதை!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv show neengalum vellalam suriya neengalum vellalam oru kodi hotstar neengalum vellalam suriya episode

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X