/tamil-ie/media/media_files/uploads/2020/06/pandian-stores.jpg)
Tamil Serial video, Vijay TV, Vijay TV Serial, Vijay TV Serial Video, Vijay TV Show Today, pandian stores, பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி, விஜய் டிவி சீரியல்
Vijay TV Show Today:யாரையாவது நக்கல், நையாண்டி செய்யணும்னா, போனில் ரஜினி படத்தின் பாடலான என்னம்மா கண்ணு சவுக்யமா பாடலை ஒலிக்க விட்டால் போதும். நாம் நினைத்தது அந்த நபரை சென்று அடைந்துவிடும்.
இதற்காக இந்தப் பாடலை டிவி சீரியலில் கதாபாத்திரங்களுக்கு எப்படி பயன்படுத்தறாங்க பாருங்க. விஜய் டி.வி-யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முத்தான மூன்று சகோதரர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகைக் கடை வைத்து நடத்துகிறார்கள். அதில் இரண்டாவது பிள்ளை ஜீவா. இவன்தான் மீனாவை காதலித்து, அவள் பெற்றோர் எதிர்க்க திருமணம் செய்துகிட்டான்.
கரடி கடுப்பாகுதே ???????? #PandianStores Marathon - இன்று மாலை 4:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KathirMullai#QuarantineTimes#VijayTelevisionpic.twitter.com/mC0ObLvcTa
— Vijay Television (@vijaytelevision) June 5, 2020
அதோடு மீனாவின் அப்பா மீனாவை கை கழுவிவிட... குடும்பத்தார் மீனாவை ஏற்றுக்கொள்ளும் நாளும் வந்துவிடுகிறது... ஆமாம், மீனா குழந்தை உண்டாகி இருக்கிறாள். உடனே அப்பா, அம்மா வந்து மீனாவையும், மாப்பிள்ளை ஜீவாவையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சுக்கிட்டு போறார். இவனோ அண்ணன் அண்ணியை பிரிந்து எங்கும் வர மாட்டேன்னு ஒரே அடம். அண்ணி தனம்தான் ஒரு வழியா ஜீவாவை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைக்கறாங்க.
இங்கே வந்தா மாமனார் ஜீவாவை எப்படியாவது அவங்க வீட்டில் இருந்து பிரிச்சு அழைச்சுட்டு வந்து வீட்டோடு மாப்பிள்ளையா வச்சுக்கணும்னு பாடுபடறார். (பார்த்தால் அப்படியே ஆனந்தம் படக் கதைதான்... பாருங்க.. இதுவும் ஒரு வெர்ஷனில் நன்றாகத்தான் இருக்கிறது.) மாமனாரின் நினைப்பு தெரியாமல் இருந்தாலும் ஜீவா மாமனாரை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறான். அவரை நெருங்கி நெருங்கி வருகிறார் மாமனார். என்ன இருந்தாலும் பெண்ணை கட்டிக்கிட்ட மாப்பிள்ளை.. அவரை நெருங்கி நாலு வார்த்தை பேசாலேன்னா எப்படி. இப்படி நினைச்சு நெருங்கினா, அப்படியே ஒதுங்கி வெளியில் போயிடறான் ஜீவா.
வெளியில போயி மாமனார் வீட்டில் என்ன செய்ய முடியும்? சரி ஒண்ணு ரெண்டு எண்ணலாம்னு எண்ணிட்டு இருக்கான். மாப்பிள்ளை என்ன பன்றாரு என்று வெளியில் எட்டிப் பார்க்கிறார் மாமனார். எண்ணிக்கொண்டு இருக்கும் ஜீவாவைப் பார்த்து அவருக்குள் அவர் சிரிச்சுக்க, இதை பார்த்து விடுகிறான் ஜீவா.
மாப்பிள்ளை என்னத்தை எண்ணிகிட்டு இருக்கார்னு இவர் சந்தேகப்பட.. ஆஹா இவர் நம்மை ஃபாலோ பன்றாரு போல இருக்கேன்னு ஜீவா நைசா நடக்க ஆரம்பிக்கிறான். அப்போதும், ஜன்னல் வழியாகப் பார்க்கும் மாமனார் நகர்வதாக இல்லை. இது வேலைக்கு ஆகாது என்று போனை எடுக்கறான். ஏதோ தேடி அமுக்குகிறான்.. வந்து விழுது என்னம்மா கண்ணு சவுக்யமா? பாடல். என்ன இருந்தாலும் பய புள்ளைக்கு நக்கல் போகலேன்னு இவர் விருட்டென்று முகத்தை ஜன்னலில் இருந்து இழுத்துக் கொள்கிறார். அவன் கரடி கடுப்பாயிருச்சு போலன்னு சந்தோஷப்பட்டுக்கறான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.