Advertisment

கழுத்தில் தாலியுடன் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை; வைரல் போட்டோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி நடிகை கோமதி பிரியா தாலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Gomathi Priya

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி நடிகை கோமதி பிரியா, கதாநாயகன் வெற்றி வசந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி நடிகை கோமதி பிரியா தாலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. 

சிறகடிக்க ஆசை தொடரில் கதாநாயகனாக வெற்றி வசந்த், கதாநாயகியாக கோமதி பிரியா நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கினாலும், சில வாரங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. ஒரு கட்டத்தில் டி.ஆர்.பி-யில் முதல் இடத்துக்கும் வந்தது. 

இந்த தொடரில் கதாநாயகியாக நடித்துவரும் கோமதி பிரியா தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம் சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வெற்றி பெற்ற சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக் மலையாளத்தில் ‘செம்பனிர் பூவு’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. மலையாளத்திலும் நடிகை கோமதி பிரியாவே நடித்து வருகிறார்.

டிவி சீரியல்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், நடிகை கோமதி பிரியா சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும், விடியோக்களையும் வெளியிட்டு ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை கோமதி பிரியா தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா தாலியிடன் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் செம்பனிர் பூவு சீரியலில் கோமதி பிரியாவுக்கு திருமணம் ஆகும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த சீரியலில் அவருக்கு திருமணம் ஆகும் காட்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கோமதி பிரியா வெளியிட்டுள்ளார். கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment