விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலுக்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னிலை பெற்றது. அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து வரும் கதையால், சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Advertisment
இந்த நிலையில் முத்துவின் சகோதரர் ரவி - ஸ்ருதி திருமணத்தால் முத்துவின் தந்தை அண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு மீனா தான் காரணம் என ஒட்டுமொத்த குடும்பமே அவர் மீது பழி போடுகிறது. மீனாவின் கணவர் முத்துவும் அவர் மீது கோபப்பட்டு அவரை அடித்து வெளியே போகச் சொல்கிறார்.
அதேநேரம் ரவி - ஸ்ருதி வந்தால் தான் அண்ணாமலையை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியும். இதனால், மீனா விடாமல் ரவியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் ரவியை தொடர்பு கொள்ளும் மீனா உடனடியாக அவரை வர சொல்கிறார், ஆனால் ரவி வர மறுக்கவே, நான் செத்தால் நீங்கள் வந்து தானே ஆக வேண்டும் என்று சொல்கிறார் மீனா. இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ரவி, உடனே ஸ்ருதியுடன் வருகிறார்.
ரவியை பார்த்ததும் முத்து, ரவியை அடிக்க போகிறார். அப்போது ஸ்ருதி, காவல்துறை அதிகாரியிடம், நாங்கள் இருவரும் மேஜர், நாங்கள் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டோம், நான் என் பெற்றோருடன் செல்ல மாட்டேன், ரவியுடன் தான் செல்வேன் என்று கூறுகிறார். இதனையடுத்து அண்ணாமலையை காவல்துறை அதிகாரி விடுதலை செய்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை குடும்பத்தினர் காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் போது மீனாவும் பின்னாடியே வருகிறார். அப்போது, நீ இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீனாவை விரட்டி அடிக்கிறார் முத்து. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் மீனா. இதனால் மீனா அடுத்து செய்யப் போகிறார், அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“