Advertisment

விஜய் டிவியின் மேலும் ஒரு ரியல் ஜோடி : பிரிட்டோ - சந்தியா திருமண வீடியோ வைரல்

தற்போது ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வரும் நடிகர் பிரிட்டோ சந்தியா ராமச்சந்திரன் ஆகியோரின் திருமணம் நடந்துள்ளது.

author-image
WebDesk
Jul 11, 2023 01:55 IST
New Update
Britto

தவமாய் தவமிருந்து சீரியல் நடிகர் திருமணம்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகர் பிரிட்டோ – நடிகை சந்தியா ராமச்சந்திரன் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமீப காலமாக சின்னத்திரையில் ஒன்றாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகமாக செய்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியில் இருந்தாவே வாழ்க்கை செட்டில் தான். பிரபலம் ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று பேச தொடங்கி விட்டார்கள்.

இதை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே செந்தில் - ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆல்யா மானசா உட்பட பலரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகர் பிரிட்டோ சந்தியா ராமச்சந்திரன் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வரும் நடிகர் பிரிட்டோ சந்தியா ராமச்சந்திரன் ஆகியோரின் திருமணம் நடந்துள்ளது. பல விஜய் டிவி பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், திருமண வீடியோவை சந்தியா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment