விதவிதமாக, புதுசுபுதுசாக நிகழ்ச்சிகளை நடத்துகிற விஜய் டிவி இந்த முறை விஜய் ஸ்டார்ஸ்களையும் அவர்களின் குழந்தைகளையும் வைத்து ஸ்டார் கிட்ஸ் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சிகள் காரணமாக எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என்று கண்ணீருடனும் மிகவும் உருக்கத்துடணும் பேசுகிறார்கள். ஆனால், நம்ம நெட்டிசன்களோ வழக்கம்போல, இது நிஜ அழுகையா நடிப்பா என்று அறந்தாங்கி நிஷா மற்றும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள்.
விஜய் டிவி புதுசுபுதுசாக விதவிதமாக நிகழ்ச்சிகளை வடிவமைத்து அதை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்து ரசிகர்களை ஈர்த்துவிடும். உதாரணத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிட் என்றால், அந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலங்களை வைத்து பிபி ஜோடிகள் என்று நிகழ்ச்சியை நடத்துவார்கள். கலக்கப்போவது யார் நிகழ்ச்சி ஹிட் என்றால், கலக்கப்போவது யார் பிரபலங்களையும் சீரியல்களையும் கொண்டு காமெடி ராஜா கலக்கல் ராணி என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதையும் ஹிட் ஆக்குவது. இப்படி புதுவிதமாக யோசித்து விஜய் டிவி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தற்போது விஜய் டிவி ‘ஸ்டார் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறது விஜய் டிவி. அதில் டிவி நட்சத்திரங்கள் தங்களுடைய குழந்தைகள் உடன் வந்து பங்கேற்றுள்ளனர். அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள், வேலை நிமித்தமாக நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் தங்கள் குழந்தைகளை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என்பதை கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஸ்டார் கிட்ஸ் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
அதில் விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் குழந்தைகள் பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி இருக்கிறார்கள். அதை கேட்டு மற்ற பிரபலங்கள் அனைவரும் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ விஜய் டிவி ரசிகர்களையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
அதே நேரத்தில், வழக்கம்போல, நெட்டிசன்கள் சிலர், விஜய் டிவி நட்சத்திரங்கள் தங்கள் குழந்தைகளை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு தங்களை மிஸ் பண்ணுகிறார்கள் என்பது பற்றி கண்ணீருடன் பேசியதற்கு சமூக ஊட்கங்களில் நெகடிவ் விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். குழந்தையை பிரிந்ததற்காக எல்லாம் அழுகிறார்கள், ஆனால் இங்கு குடும்பம் குழந்தைகளை விட்டு எத்தனை பேர் வெளிநாட்டில் வருடக்கணக்கில் வேலை செய்கிறார்கள் என சொல்லி விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூல நகைச்சுவை கலைஞராக பிரபலமான அறந்தாங்கி நிஷாவும் சூப்பர் சிங்கர் பிரபலம் பாடகி ராஜலட்சுமியும் தங்கள் பிள்ளைகளை எந்த அளவுக்கு மிஸ் பண்ணுகிறார்கள் என்று கண்ணீருடன் அழுதுகொண்டு கூறுவதை, நெட்டிசன்கள் சிலர் இது நிஜ அழுகையா நடிப்பா என்று அறந்தாங்கி நிஷா மற்றும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள். அவரவர் வலியும் வேதனையும் அவரவருக்கு பெரியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”