சினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன? விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்!

அங்கிருந்த பொதுமக்கள் தன்னை சரமாரியாக திட்டி தனக்கு அழுகையை வர வைத்ததாகவும்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுனிதா கார் விபத்தை ஏற்படுத்தி பொதுமக்களுடன் சண்டையிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி, சில தமிழ் படங்கள் மற்றும் பாடல் ஆல்பங்களில் நடித்தவர் தான் நடிகை சுனிதா. சிறப்பாக நடனம் ஆடிக் கூடிய இவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்.சுனிதா மது அருந்திவிட்டு கார் ஓடிச் சென்று விபத்துக்குள்ளானதும், அங்கிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காரில் இருந்தப்படி சுனிதா என்ன என்ன? என்று கேட்பதும் அதற்கு பொதுமக்கள் அவரை சரமாரியாக திட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ உடன் சுனிதா மது அருந்திவிட்டு போதையில் தான் காரை ஓட்டிச் சென்றதாக தகவலும் பரவின.

ஆனால், இந்த சம்பவம் குறித்து நடிகை சுனிதா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், தனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், வேலூரில் சூட்டிங் முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது தனது டிரைவர் தான் காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக கூறியுள்ளார். மேலும், அங்கிருந்த பொதுமக்கள் தன்னை சரமாரியாக திட்டி தனக்கு அழுகையை வர வைத்ததாகவும், மொழி தெரியாததால் அவர்களுடன் பேச முடியவில்லை, நடந்தவற்றை விளக்கமும் முடியவில்லை என்று சுனிதா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுனிதாவின் கார் விபத்து வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

×Close
×Close