Advertisment

இதுதான் எங்க ஸ்டைல் அரபிக்குத்து... அதகளம் செய்யும் விஜய் டிவி ஸ்டார்ஸ்

Tamil Cinema Update : விஜய் டிவி பிரபலங்களாக மாகாபா ஆனந்த் பிரியங்கா உள்ளிட்ட சில பிரலங்கள் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோபதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
இதுதான் எங்க ஸ்டைல் அரபிக்குத்து... அதகளம் செய்யும் விஜய் டிவி ஸ்டார்ஸ்

Vijay tv Stars Arabic Kuththu Song Dance : மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத்து இசையமைத்துள்ளார்.

Advertisment

சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றார்போல் இந்த படத்தில் படப்பிடிப்பும் வேகமாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தில் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அதற்கு இரு நாட்களுக்கு முன்பே பாடலுக்கான ப்ரமோ வெளியிடப்பட்டது இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போல வெளியான இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த 14-ந் தேதி மாலை பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியானது சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும்  நடனமாடி வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவி பிரபலங்களாக மாகாபா ஆனந்த் பிரியங்கா உள்ளிட்ட சில பிரலங்கள் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோபதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோவில் மாகாபா ஆனந்த் ஆடும் நடனம் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamil Cinema Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment