Vijay tv Sun Tv TRP Rating in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் மக்கள் எந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை அதிகம் ரசிக்கிறார்கள் என்பதற்கான தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி ரேட்டிங்) ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC India) வராந்தோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 21வது வாரத்திற்கான ( மே 22 சனிக்கிழமை முதல் மே 28 வெள்ளிக்கிழமை வரை) டிஆர்பி ரேட்டிங் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எப்போதும் போலவே சன் டிவி தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது. இந்த வாரத்தில் அது ஒளிபரப்பிய ‘முத்து’ மற்றும் ‘அரண்மனை – 2’ திரைப்படங்கள் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.
சீரியல்களை பொறுத்தவரை, கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி – 2 சீரியல்கள் ‘சிறப்பு மெகா சங்கமம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இதே போல் இந்த இரு சீரியல்களும் ஒளிபரப்பட்ட போது நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த முறை எதிர்பார்த்த அளவு பார்வையாளர்கள் கிடைக்கவில்லை.
இதற்கு காரணமாக ஒரு ரிசார்ட்டில் வரும் காட்சி கூறப்படுகிறது. அந்த காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவருமே பங்கேற்காததால் சுவாரஸ்யம் இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த வார டாப் 5 நிகழ்ச்சிகள் லிஸ்டில் விஜய் டிவிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அந்த 5 இடங்களையும் சன் டிவி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த டாப் 5 லிஸ்டில் ரோஜா 3ம் இடத்திலும், வானத்தை போல 4ம் இடத்திலும் உள்ளன.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள டாப் 5 சேனல்கள் லிஸ்டில் சன் டிவி வழக்கம் போல முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய் டிவி எப்போதும் போல 2ம் இடம் பிடித்து இருந்தாலும், அதற்கான பார்வையாளர்கள் கடுமையாக குறைந்திருப்பதை புள்ளிவிவரம் காட்டுகிறது. முதலிடத்திற்கு போட்டியிட்டு வந்த விஜய் டிவி தற்போது 2ம் இடத்தை தக்க வைக்க கேடிவி- யோடு போட்டியிடும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலை இப்படியே நீடித்தால் அடுத்த வாரத்தில் கேடிவி ஓவர் டேக் செய்து விடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“