திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அவர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபமாக, விஜய், ஜீ, கலர்ஸ் என அத்தனை தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
Advertisment
விஜய் டிவி அதன் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமானது. இவர்களின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் பெரும்பாலும் பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன.
இப்போது விஜய் டிவி முத்தழகு என்ற புதிய சீரியலை கடந்த நவம்பர் முதல் ஒளிபரப்பி வருகிறது. தன் அன்றாடச் செலவுகளுக்காக விவசாயம் செய்யும் ஏழை பெண் மற்றும் பணக்காரப் பின்னணியில் இருந்து வரும் ஹீரோ இருவரையும், வாழ்க்கை எப்படி இணைக்கிறது, அங்கிருந்து அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறார்கள் என்பது கிராமம் சார்ந்த குடும்ப சூழலில் இந்த கதை நகர்கிறது.
அதேபோல, சமீபத்தில் ஜீ தமிழும் அன்பே சிவம் என்னும் புதிய சீரியலை அறிமுகம் செய்தது. திருமணமான தம்பதிகள் சிறு பிரச்சனைகளால் பிரிந்த கதை இது.
Advertisment
Advertisements
அந்தவகையில், சன் டிவியில் தினமும் ஒளிபரப்படும் கயல் சீரியல் சமீபத்தில் தான் வெளியானது. ஜீ தமிழ் டிவியில், யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி, இந்த சீரியலின் நாயகியாக பொறுப்பான குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான புதிதிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து, இதுவரை எந்த சீரியலும் செய்திராத சாதனையை செய்தது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ், பேரன்பு என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது. இதன் ப்ரொமோ சமீபத்தில் வெளியானது. இதில், தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடிக்கிறார். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்தவர். விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பேரன்பு சீரியலில்,தேஜஸ்வினியுடன் ஷமீதா ஸ்ரீகுமார், வைஷ்ணவி, விஜய், லக்ஷ்மி உள்பட பலர் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.
இதேபோல் தெய்வம் தந்த பூவே என்ற புதிய சீரியலும் ஜீ டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில், நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சீரியல்களும் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் பெரிய திருப்பங்கள் ஏதுமில்லை. இதனால் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், ஜீ தமிழ் சீரியல் வரிசையாக புதிய சீரியல்களை இறக்குமதி செய்வதால், டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த டிவியின் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”