விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி பிரகதி குரு தனது தாயுடன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பாடகர்களுக்காக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமனாவர் பாடகி பிரகதி குரு. வெற்றிகரமான பாடகியாக வலம் வரும் பிரகதி குரு உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இன்று பிசியான பாடகர்களில் ஒருவாரக இருக்கும் பிரகதி குரு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருக்கு உற்சாகமளித்து உறுதுணையாக இருந்தவர் அவருடைய அம்மா கனகா குருதான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கமிங்’ பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பற்று பிரபலமானது. வாத்தி கமிங் பாடலின் இசையைக் கேட்பவர்கள் யாரும் டான்ஸ் ஆடாமல் இருப்பது கடினம். இந்த பாடலுக்கு, நடிகர்கள், நடிகைகள் என பலரும் நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
???????? —> ???? #vaathicoming Wearing @heybootiful_hq & @kancheevaram_weaves_by_zobha
அந்த வரிசையில், பாடகி பிரகதி குருவும் அவரது தாய் கனகா குருவும் வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பிரகதி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் “அம்மா- மகள்னா இப்படி இருக்கணும்பா” என்று கூறி பகிர்ந்து வருவதால் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.