/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-4.jpg)
raja rani hotstar raja rani serial vijaytv
ராஜா ராணி தொடரின் இரண்டாவது பாகம் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகத்தில் நாயகன் நாயகியாக நடித்த ஆல்யா மானசா சஞ்சீவ் இருவரும், காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு, ஐலா சையத் என்கிற மகள் உள்ளார். இரண்டாம், பாகத்தில் ஆல்யா மானசா, சித்து ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த சீரியலின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்ற, ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் படப்பிடிப்பின் நடுவே, சித்துவை கண்ணத்தில் அறையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ராஜா ராணி தொடர் சஞ்சீவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த தொடரின் வெற்றியை அடுத்து தற்பொழுது அதே தொலைக்காட்சியில் 2019 இல் காற்றின் மொழி என்ற தொடரில் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us