Advertisment

இது என்னங்க நியாயம்..? ஹீரோவை விட அம்மா நடிகைக்கு வயது கம்மியாம்!

Vijay TV Tamizhum saraswathiyum serial Meera krishnan age less than Deepak: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவை விட அம்மாவாக நடிப்பவருக்கு வயது குறைவு என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இது என்னங்க நியாயம்..? ஹீரோவை விட அம்மா நடிகைக்கு வயது கம்மியாம்!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவை விட அம்மாவாக நடிப்பவருக்கு வயது குறைவு என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக தீபக்கும் ஹீரோயினாக நட்சத்திராவும் நடித்து வருகின்றனர்.

படிக்காத ஹீரோ நன்றாக படித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, படிப்பு ஏறாத ஹீரோயினை காதலிக்கிறார். ஹீரோவின் அம்மாவோ படித்த பெண்ணை தான் தன் மகனுக்கு திருமணம் செய்வேன் என சபதம் எடுத்துள்ளார். இந்த நிலையில் ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேரப் போகிறார்கள் என இந்த சீரியலின் கதைப்போய் கொண்டிருக்கிறது. இப்படி சுவாரஸ்யமான கதையின் காரணமாக இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

publive-image

இந்த நிலையில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணனுக்கு ஹீரோ தீபக்கை விட வயது குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவின் அம்மா கோதையாக நடிக்கும் மீரா கிருஷ்ணனுக்கு 36 வயது தான் ஆகிறது. ஆனால் ஹீரோ தீபக்கிற்கு 41 வயது ஆகிறது. மீரா கிருஷ்ணன் சித்தி 2 சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Tamizhum Saraswathiyum
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment