விஜய் டிவியில் புதிததாக ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் புதிய ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் ப்ரைம் டைம்மான இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. குடும்ப சூழ்நிலையில் படிக்காத ஹீரோ, படிப்பே ஏறாத ஹீரோயின் இவர்களுக்குள் ஏற்படும் காதல் என கதை இருப்பதாக வெளியான ப்ரோமோவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் ஹீரோ தமிழாக தீபக்கும் ஹீரோயின் சரஸ்வதியாக நட்சத்திராவும் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இன்னும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் ஹீரோ தமிழ் தன் மாமன் மகளை பெண் பார்க்க வருகிறார். அப்போது அவரது மாமன் மகள் தான் எம்.டெக் படித்திருப்பதாகவும், 10வது மட்டுமே படித்துள்ள அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறி திருமணத்தை நிராகரிக்கிறார்.
இதனால் தமிழ் உடைந்து போகிறார். அப்போது தமிழின் தாய், அந்த பெண்ணை பார்த்து, உனக்காக எல்லாம் செய்தவனை வேண்டாம்னு சொல்றியா, உன்னை விட அதிகமாக படித்த பெண்ணை தமிழுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று சவால் விடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்நிலையில் 12வது வகுப்பில் பாஸ் ஆவதற்கே போராடும் சரஸ்வதி எவ்வாறு தமிழுக்கு ஜோடியாக மாறப்போகிறார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. மேலும் அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக, மாமன் மகளிடம் சவால் விடும் தமிழின் அம்மா எப்படி சரஸ்வதியை ஏற்றுக்கொள்வார். இவர்கள் எப்படி சேரப் போகிறார்கள் என்பதாக இந்த சீரியல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறப்பான சீரியல்களை கொடுத்துள்ள குமரன் இந்த சீரியலை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த சீரியலுக்கு அதிகமாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil