vijay tv thangadurai comedy: விஜய் டி.வியின் `கலக்கப்போவது யாரு' ஷோவை மட்டுமல்ல, அதில் பர்ஃபார்ம் செய்த தங்கதுரையையும் மக்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள் இவர் சொல்லும் சில ஜோக்ஸுக்கு அவராலயே அர்த்தம் சொல்ல முடியாது.
Advertisment
சென்னையை தான் தங்கதுரையின் சொந்த ஊர். கல்லுரியில் படிக்கும்போதே சென்னை ஸ்டாண்டாஃப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை கொண்டு இருந்தவர். மேலும்,சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் ,கல்லூரி மேடைகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு மக்களிடையே பெரிய அளவு பிரபலமானர்.
இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு அப்படியே பெரிய திரையிலும் தொடர்ந்தது. சந்தானம், சிவகார்த்திகேயன் படங்களில் ஏற்கனவே நடித்து விட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் எல்லா காமெடி ஷோவிலும் இவர் தலையை பார்க்கமால் இருக்க முடியாது.
அது மட்டும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான சமீபத்தில் தான் முடிந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் தங்க துரையும் அவருடைய மனைவியும் கலந்து கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைப்பெற்றது. இவரது திருமண நிகழ்ச்சியில் விஜய்சேதுபது நக்கீரன் கோபால் என பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
தங்கதுரையின் இந்த வெற்றிக்கு காரணம் அவரின் விடா முயற்சி மட்டுமே. ஆரம்பத்தில் கானா பாடல்களை மட்டுமே பாடிக் கொண்டிருந்தவர் தன்னுக்குள் இருக்கும் திறமையை அடையாளப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி நின்று மேடை நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
‘புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே’ என்ற சொன்ன ஜோக் வேற லெவலில் ரீச் ஆனது. அதுக்கு அப்புறம் தான் தங்கத்துரை வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாக மாறியது.