விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியான நிலையில், மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும் அதற்காக ஸ்பெஷல் கிளைமாக்ஸ் ரெடியாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டி.ஆர்.பி.யில் டாப் 5 இருந்து வந்தது. தற்போது மீனாவின் அப்பாவைக் கொலை செய்தது பிரசாந்த் என்பது தெரியவந்து, கதிர், ஜீவா இருவரும் சிறையில் இருந்து வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். மீனாவின் அப்பாவுக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை புரிந்துகொள்கிறார். மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து உள்ளனர். இந்த சூழலில்தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலான ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் டி.ஆர்.பி-யில் சறுக்கியதால் இந்த சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலின் ‘ஸ்பெஷல் க்ளைமாக்ஸ்’ எபிசோடுகளை சீரியல் குழுவினர் படமாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 2021-ல் தொடங்கப்பட்ட ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் 650 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பான பிறகு முடிவடைகிறது.
‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிருத்திகா லட்டு, சசிந்தர் புஷ்பலிங்கம், பெரோஸ் கான், மரியா ஜூலியானா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த சீரியலின் கதை, அபிநயா என்ற பாரம்பரியம் மிக்க பெண்ணைச் சுற்றியே கதை சுழல்கிறது. அவர் தனது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை நிலைநிறுத்துகிறார் மற்றும் மரபுகள் மற்றும் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி அறியாத முரடன் வெற்றி அவருக்கு தாலி கட்டிச் செல்கிறார். பிறகு, இருவரும் காதலித்து வாழ்கிறார்கள். மீண்டும் பிரிகிறார்கள். இப்போது அபிநயா கலெக்டராக இருக்கிறார். அபிநயாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது வெற்றிக்கு தெரிய வருகிறது. இப்போது இருவரும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை.
ஏற்கெனவே, விஜய் டிவியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல்கல் வந்த நிலையில், மேலும் ஒரு சீரியலாக தென்ற வந்து என்னைத் தொடும் சீரியலும் முடிவுக்கு வருகிறது என்ற தகவல் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“