Thenmozhi Serial: விஜய் டி.வி-யின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, ரசிகர்களுக்கு அறிமுகமானார் வி.ஜே.ஜாக்குலின். பின்னர் கோலாமாவு கோகிலா படத்தில், நயன்தாராவின் சகோதரியாக நடித்து இன்னும் பிரபலமானார். தற்போது 'தேன்மொழி ஊராட்சி மன்ற தலைவர்’ என்ற புதிய சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Advertisment
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியல், இந்தியில் ஒளிபரப்பான ’நிம்கி முகியா’ என்ற சீரியலின், ரீமேக்காக உருவாகிறது. நிம்கி என்ற கவலையற்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்த சீரியல் இயக்கப்பட்டிருக்கும். அந்தப் பெண் தற்செயலாக ஊராட்சி மன்ற தலைவர் ஆகிறார். அதன் பின் என்ன நடக்கும், நிம்கிக்கு பொறுப்பு வந்ததா என்பதே மீதிக் கதை.
தமிழில் ரீமேக்காகும் இந்த சீரியலில் நிம்கி கதாபாத்திரத்தில், ஜாக்குலின் நடிக்கவுள்ளார். ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும், சீரியலின் ப்ரோமோக்களையும், உடைகளையும், சில எபிசோட்களையும் பார்த்ததும் அந்த தயக்கம் எல்லாம் பறந்தோடி விட்டது, என்கிறார் ஜாக்குலின்.
ஒரு திருமணமான பெண்ணாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள் என்பதற்கு, “35 வயது பெண்கள் கூட ஹீரோயின் என வந்துவிட்டால், பள்ளி செல்லும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எனக்கு 23 வயதாகிறது. நான் ஏன் திருமணமான பெண்ணாக நடிக்கக் கூடாது” என்கிறார் ஜாக்குலின்.
தற்போது ஒளிபரப்பு தேதி குறிப்பிடாமல், தேன்மொழி ஊராட்சி மன்ற தலைவர் சீரியலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.