Vijay TV Serial : பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகள் என்று, விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது. மாலை 6:30 மணிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பித்து, மெளனராகம் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று மறு ஒளிபரப்பு செய்வதாக அறிவித்து இருக்கிறது.
தனுஷ் ஹீரோயின் ஐஸ்வர்ய லெக்ஷ்மி, நூடுல்ஸ் மண்ட ரித்திகா – படத் தொகுப்பு
கோவிட்-19 ஊரடங்கு உத்தரவு நேரத்தில் படப்பிடிப்புகள் ரத்து, சீரியல் ஷூட்டிங் ரத்து. இந்த நிலையில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பிய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்யும் பணியை துவங்கி உள்ளன. மதிய நேரத்தில் ராஜா ராணி சீரியல், சரவணன் மீனாட்சி மற்றும் சின்ன தம்பி, ஆகிய சீரியல்களையும் ஒளிபரப்பத் துவங்கி உள்ளது விஜய் டிவி.
ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து, சில மாதங்களில் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் ஆரம்பித்து திருமணமும் செய்துக்கொண்டனர். இந்த சீரியல் மூலம் ஆல்யா மானசா இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம்பெற்று பலரின் தூக்கத்தை கலைத்தார். இந்த ஜோடிக்காகவே சீரியல் பார்த்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இவர்கள் திருமணமும் செய்துக்கொண்டனர். இப்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு உத்தரவு உள்ள இந்த நேரத்தில் ராஜா ராணி சீரியலையும் மறு ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டு ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இதோடு சக்கைப் போடு போட்ட சரவணன் மீனாட்சி தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.
மகிழ்ச்சியான யோகா பயிற்சி: மோடி புதிய வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”