Advertisment

விஜய் டிவியின் இந்த சீரியல் ரஜினிகாந்த் படத்தின் காப்பியா?

Vijay tv serial velaikkaran story copy from muthu movie social media trolls: சீரியலின் ப்ரோமோவில், வேலைக்காரனாக வரும் ஹீரோதான் அந்த வீட்டின் எஜமானர் என்பதுபோல் காட்டியிருப்பார்கள். இந்த ப்ரோமோவை பார்த்தவுடன் இது 1995ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து படத்தின் காப்பிதான் என நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

author-image
WebDesk
May 27, 2021 15:13 IST
விஜய் டிவியின் இந்த சீரியல் ரஜினிகாந்த் படத்தின் காப்பியா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், ஒரு சில சீரியல்கள் திரைப்படங்களின் கதைப் போன்றே உள்ளன என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் என்ற அளவிற்கு ரியாலிட்டி ஷோக்களில் தனி முத்திரை பதித்துள்ளது. விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோக்களை வேறு எந்த தொலைக்காட்சி சேனல்களும் நெருங்க முடியாது. அந்த அளவிற்கு அவற்றின் தரத்தில் விஜய் டிவி அக்கறை செலுத்தும்.

சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அவை டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னிலை பெற்று வருகின்றன. ஆனால் இந்த சீரியல்களின் கதை, திரைப்படங்களின் கதையைப் போன்று உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை அப்படியே, லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் படத்தின் கதையைப் போன்றே உள்ளது. ராஜா ராணி சீரியலின் முதல் பாகம் ஒகே, ஆனால் இரண்டாம் பாகம் ஹிந்தி சீரியலின் ரீமேக் தான். மேலும், வரலாற்று தொடராக வரும் வேலம்மாள் சீரியல், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ருத்ரமாதேவி கதையை பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் யூடியூப் சபரி பிரபலம் கதைநாயகனாக நடிக்கிறார். கோமதி பிரியா மற்றும் வாசு விக்ரம் போன்றோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

publive-image

இந்த சீரியலின் ப்ரோமோவில், வேலைக்காரனாக வரும் ஹீரோதான் அந்த வீட்டின் எஜமானர் என்பதுபோல் காட்டியிருப்பார்கள். இந்த ப்ரோமோவை பார்த்தவுடன் இது 1995ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து படத்தின் காப்பிதான் என நெட்டிசன்கள் கூறிவந்தனர். முத்து படத்தில் ஜமீனில் வேலைக்காரனாக இருக்கும் ரஜினிதான் ஜமீனுக்கு உண்மையான சொந்தக்காராக இருப்பார். தற்போது சீரியல் வெளிவந்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த சீரியலின் கதை முத்து படத்தின் கதைதான் என உறுதி செய்து, இந்த சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Tv Serial 2 #Velaikkaran #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment