scorecardresearch

10 ஆண்டுகள் நிறைவு.. பிரியங்காவை கண்ணீரில் மூழ்கடித்த விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் பிரியங்கா.

10 ஆண்டுகள் நிறைவு.. பிரியங்காவை கண்ணீரில் மூழ்கடித்த விஜய் டிவி

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியாக இருக்கும் பிரியங்கா சின்னத்திரைக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அவருக்கு நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் இணைந்து கிஃப்ட் கொடுத்துள்ளனர்.   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் பிரியங்கா. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் இவர், விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் கிடைத்தது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜீ தமிழின் தி சிர்ப்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பிரியங்கா, தொடர்ந்து அழகிய பெண்ணே, சுட்டி டிவியின் டாடி மை ஹீரோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2015-ம் ஆண்டு விஜய் டிவியின் சினிமா காரம் காபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பின் தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 3-ல் கெஸ்டாக களமிறங்கினார். விஜய் டிவியில் டிடி-க்கு பிறகு பெண் தொகுப்பாளியாக வலம் வரும் பிரியங்கா, தனது சிறப்பாக நிகழ்ச்சி தொகுப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜய் டிவியின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா சின்னத்திரையில் 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதற்காக அவரது சாதனைகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பதியப்பட்டுள்ள போட்டோ ப்ரேம் ஒன்றை நிகழ்ச்சி குழுவினர் பிரியங்காவுக்கு கிஃப்ட்டாக வழங்கியுள்ளனர்.

இதை பார்த்த பிரியங்கா எமோஷனலாக பேசி எனது குடும்பத்தார் இல்லை என்றால் இங்கு நான் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv vj priyanka completion of 10 years celebrate in bb jodigal show