பணத்துக்காக அதை மட்டும் பண்ண மாட்டேன்: விஜய் டி.வி சோயா

3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி, இன்று பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ஷாலின் ஜோயா எவ்வளவு பணம் கொடுத்தாலும்தான் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யமாட்டென் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி, இன்று பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் ஷாலின் ஜோயா எவ்வளவு பணம் கொடுத்தாலும்தான் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யமாட்டென் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shaalin Zoya

3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி, இன்று பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார் ஷாலின் ஜோயா. தனது நீண்ட பயணத்தில் பல சவால்களை சந்தித்த அவர், எவ்வளவு பணம் கொடுத்தாலும்தான் தன் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன் என நேர்க்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

Advertisment

சிறு வயதிலேயே நடிப்புலகில் அடியெடுத்து வைத்த ஷாலின், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பள்ளிப் பருவத்தில் சூர்யா டி.வி-யில் தொகுப்பாளராகப் பணியாற்றியது அவரது இன்னொரு திறமையை வெளிப்படுத்தியது. மலையாளத்தில் அவர் நடித்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. நடிப்பு மற்றும் தொகுத்து வழங்குதல் என இரண்டு துறைகளிலும் தனது திறமையை தொடர்ந்து வளர்த்துக் கொண்டார். கடந்த 24 ஆண்டுகளாக ஊடகத் துறையில் அவரது பயணம் தொடர்கிறது.

மலையாளத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், தமிழில் ராஜா மந்திரி' பட வாய்ப்பு கிடைத்தது. தமிழ் தெரியாது என்றாலும், ஒரு புதிய முயற்சியாக அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப் படத்திற்குப் பிறகு, அவருக்கு கண்ணகி' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. `கண்ணகி'யில் அவரது கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அந்தக் கதாபாத்திரத்துடன் மிகவும் ஒன்றிணைந்து நடித்ததாக ஷாலின் ஜோயா தெரிவித்தார்.

அதன் பிறகு வந்த வாய்ப்புகள், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததால், அவர் அவற்றை தவிர்த்துவிட்டார். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும், இரண்டு காட்சிகள் வந்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி பெரிதாக அறியாத ஜோயா, இங்கு வந்த பிறகுதான் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில், டாப் குக்கு டூப் குக்கு' மற்றும் குக்கு வித் கோமாளி' ஆகிய இரு நிகழ்ச்சிகளிலிருந்தும் வாய்ப்புகள் வந்தன.

Advertisment
Advertisements

`குக்கு வித் கோமாளி'க்கு முதலில் அழைப்பு வந்ததால், அதில் பங்கேற்க முடிவெடுத்தார். தான் தனிமையில் வேடிக்கையானவர் என்றாலும், பொதுவெளியில் அப்படி இல்லை என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி அவருக்கு மக்களிடையே நிறைய அன்பை பெற்றுத் தந்துள்ளது. நிகழ்ச்சிக்குப் பிறகு ஓய்வெடுக்க நினைத்திருந்தாலும், ஜீ தமிழில் தொகுத்து வழங்க கிடைத்த வாய்ப்பால் மீண்டும் களமிறங்கினார்.

தற்போது நடிகை சுஜிதாவுடன் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் நேர்க்காணல் ஒன்றில் பணம் தேவைதான் என்றாலும், அதற்காக பிக்பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியுடன் கூறியுள்ளார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: