/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-20T175352.777.jpg)
pandian stores serial, vijaytv serial, tv, பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி சீரியல், டிவி, vijay tv, vijay tv serial, pandian stores serial porblem, ஊரடங்கு, lock down problem, vijay tv serial news, latest tv serial news, coronavirus
vijay tv serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லாக்டவுன் ஆரம்பித்த காலக் கட்டத்தின் கஷ்டம் பற்றி ஷூட் செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கடையும் இல்லை என்று ஆன நிலையில் எப்படி காலம் கழிந்தது என்று போகிறது சீரியல். கவர்ன்மென்ட் சொல்லி கடையை அடைச்சாச்சு.. ஏற்கனவே சரக்கு இருக்கிறது... இன்னும் ஆர்டர் செய்து அந்த சரக்கும் வந்து இறங்கி பணமும் கொடுத்தாச்சு.. விற்காமல் இருந்தால் நஷ்டம்தானே என்று கதிரிடம் கவலைப் படுகிறான் ஜீவா. அண்ணன்கிட்டே சொன்னியா சரக்கு மேலும் வந்து இருக்குன்னு என்று கதிர் கேட்க, அண்ணனுக்குத்தான் தெரியுமேடா.. அண்ணன்தான் பணம் கொடுக்க சொன்னுச்சு என்று சொல்கிறான் ஜீவா. கடையை திறக்கலேன்னா நம்மையே நம்பி இருக்கும் சில பேர் எப்படி சமையல் செய்து சாப்பிடுவாங்க...பேசாம ஒரு கதைவை திறந்து வச்சு, வேண்டிய சாமான்களை அவங்களுக்கு கொடுப்போமா என்று கேட்கிறான் கதிர்.
அதெல்லாம் ஒன்னும் செய்ய வேணாம்ணே.. அப்புறம் வம்பா ஆகிறப் போகுது..சரக்கு என்ன கெட்டா போகப் போகுது.. என்று சொல்றான் கடைக்குட்டி கண்ணன். இன்னிக்கு எல்லாரும் வீட்டில் இருக்காக... வாய்க்கு ருசியா சமைச்சு போடணும்னு சொல்லி முல்லை சமைக்கிறாள். வழக்கம் போல மீனா, தனத்தை நினைத்து, இந்நேரம் அவங்க இருந்து இருந்தா மூணு ஜூஸ் குடுத்து இருப்பாங்க. பாருங்க நீங்க இன்னும் ஒரு ஜூஸ் கூட கொடுக்கலை என்று சொல்லி, முல்லையிடம் ஜூஸ் கேட்டு வாங்கி குடிக்கிறாள். நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்ட மீனாவிடம்.. வேணாங்க.. உங்களை பார்த்துக்கறதே எனக்கு பெரிய வேலையா இருக்கு. மாசமா இருக்கும் நீங்க சும்மா இருந்தாலே போதும்னு சொல்றா முல்லை.
கண்ணன், முல்லை, கதிர் உட்கார்ந்து இருக்க...கதிர் துணியை மடிக்கிறான். ஏங்க.. அது அப்படி இல்லைங்க.. இப்படி என்று இவள் வாங்கி அதை மடித்து காண்பிக்கிறாள். இல்லை இப்படித்தான் என்று கதிர் மீண்டும் மடித்து காண்பிக்க...இல்லைங்க என்று மீண்டும் வாங்குகிறாள் முல்லை.ஹலோ.. என்று பொறுக்க முடியாமல் கூப்பிட்ட கண்ணன், ரெண்டு பேரும் துணியை மடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியளா என்று கேட்கிறான். ஏண்டா என்று கதிர் கேட்க.. நீங்க மடிக்கறதை அவங்க கலைக்கறதும்... அவங்க மடிக்கறதை நீங்க கலைக்கறதும்... ரொம்ப கொடுமையாவுல்ல போயிகிட்டு இருக்குன்னு சொல்றான். நிறைய துணி இருக்கு இல்லடா என்று முல்லை சொல்ல, எது இந்த 8 துணி... நிறைய துணியா? இதை 40 நிமிஷமே மடிச்சுக்கிட்டு இருக்கீங்க. அண்ணன் அண்ணி இல்லாதது உங்களுக்கு கொழுப்பா போயிருச்சு இல்ல என்று கண்ணன் கேட்கிறான்... அண்ணன் இருந்தா துணி மடிக்க வேணாம்னு சொல்லிடுமா என்று கதிர் கேட்க...துணி மடிக்கிறேன்னு இப்படி ரொமான்ஸ் பண்ண முடியாது இல்ல என்று கண்ணன் மீண்டும் சொல்றான். டேய் இதுக்கு பேர் ரொமான்ஸாடா என்று முல்லை கேட்க, அப்போ இது ரொமான்ஸ் இல்லையா என்று பாவமாக கேட்கிறான் கதிர்.கண்ணன் கேலியாக சிரிக்க.. ஏங்க.. நீங்க வேற என்று சொல்கிறாள் முல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.