தஹாத் படத்தின் ஹீரோ விஜய் வர்மா மற்றும் அவரது காதலியும் நடிகையுமான தமன்னா பாட்டியா இருவரும் நேற்று இரவு ஒரு திரைப்படத்துக்கு சென்றுள்ளனர். இருவரும் மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் இருந்து வெளியேறும்போது புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஜோடியின் பயணத்தின்ஒரு வீடியோ ஒரு போட்டோகிராஃபர் சமூக ஊடகக் கணக்கில் பகிரப்பட்டது.
தமன்னா தளர்வான சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருதார், விஜய் வர்மா மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் டிராக் பாண்ட் அணிந்திருந்தார்.
ஜனவரி முதல், தமன்னா பாட்டியாவும், விஜய் வர்மாவும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. கோவாவில் நடந்த புத்தாண்டு பார்ட்டியில் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டனர். இருவரும் சில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். ஆனால், அவர்களது உறவு குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை.
விஜய் வர்மா மற்றும் தமன்னா-வின் சமீபத்திய வீடியோவைப் பாருங்கள்:
இதற்கிடையில் விஜய் வர்மாவின் வெப் சீரிஸ் தஹாத் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில், நடிகரை அவரது சக நடிகர்களான சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவய்யா மற்றும் சோஹும் ஷா ஆகியோர் கிண்டல் செய்தனர்.
இந்த வெப் சீரிஸின் ஒரு பகுதியாக இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட குல்ஷன், “நான் பெரும்பாலான நேரங்களில் சீருடையில் இருந்தேன், அதனால் நான் அதை மிகவும் ரசித்தேன். சீருடை அணிய வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. குல்ஷனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த விஜய் முகம் சிவக்க, பார்வையாளர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். சோஹும் இப்படி ஒரு பாத்திரம் கிடைத்தது அவரது ‘தமன்னா’வால்தான் என்று கிண்டல் செய்தார். சோனாக்ஷி, “அந்தப் பெண்ணுக்கு பல விக்கல்கள் வரும்” என்று கிண்டலாகக் கூறிச் சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”