பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னா பாட்டியாவும் நெட்ஃபிளிக்ஸின் அந்தாலாஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2- பணிபுரியும் போது காதலித்தனர். நானும் தமன்னாவும் எங்கள் ரசிகர்களிடமிருந்து ஏன் எங்கள் ரிலேஷன்ஷிப்பை மறைக்கவில்லை என்பதை விஜய் வர்மா வெளிப்படுத்தினார்.
டார்லிங்ஸ், தஹாத், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற அவரது சமீபத்திய புராஜெக்ட்களுக்காக கூடுதலாக, நடிகர் தமன்னா பாட்டியாவுடனான தனது உறவுக்காக விஜய் வர்மா தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், விஜய் வர்மாவும் தமன்னாவும் ஏன் தங்கள் உறவை மறைக்க விரும்பவில்லை என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடனான உரையாடலின் போது, பல பாலிவுட் நட்சத்திரங்களைப் போல அவரும் தமன்னாவும் ஏன் தங்கள் ரிலேஷன்ஷிப்பை மறைக்கவில்லை என்று விஜய்யிடம் கேட்டபோது, நடிகர் விஜய் வர்மா, ஒரு பாடல் மூலம் தனது உணர்வை வெளிப்படுத்தினார். முகல்-இ-ஆஜாமின் 'ஜப் பியார் கியா தோ தர்னா கியா' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறினார்.
பிலிம் கம்பானியன் உடனான முந்தைய கலந்துரையாடலில், விஜய் ஆரம்பத்தில் ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், தமன்னாவை சந்தித்ததும் அவரது பார்வை மாறியது. அவர் கூறியிருந்தார், “நான் தொடங்கும் போது, நான் ஒரு நடிகை அல்லது சினிமா தொழில்துறையைச் சேர்ந்த யாருடனும் இருக்க மாட்டேன் என்று நினைத்தேன், ஏனெனில், நான் இந்த இண்டஸ்ட்ரீ மீது மிகவும் கோபமாக இருந்தேன். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கத் தொடங்கியபோது, விளையாட்டை அறிந்த, வணிகத்தை அறிந்த, கலை, படைப்பாற்றல், நிதி, திரைப்படத் தயாரிப்பின் அனைத்துப் பக்கங்களையும் புரிந்து கொண்ட ஒருவரைக் கொண்டிருப்பதில் எனக்கு அதிக மதிப்பு கிடைத்தது.” என்று கூறினார்.
விஜய் வர்மாவும் தமன்னாவும் முதன்முறையாக நெட்ஃபிளிக்ஸின் அந்தாலாஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ல் ஒன்றாக நடித்தனர். அதில் அவர்களது மறுக்க முடியாத கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. நெட்ஃபிளிக்ஸ் படத்தில் இணைந்து பணியாற்றியபோது தானும் விஜய்யும் காதலித்ததாக தமன்னா பாட்டியா முன்பு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், விஜய் அடுத்ததாக கரீனா கபூர் கானுடன் தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் படத்தில் நடிக்கிறார். சாரா அலி கானுடன் ஹோமி அட்ஜானியாவின் மர்டர் முபாரக் படமும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிர்சாபூர் 3 படமும் திரைக்கு வர தயாராக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“