Advertisment

மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதியின் கதா பாத்திரங்களின் பெயர் கசிந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay, vijay sethupathi, what is vijay characters name in master movie, விஜய், விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர், vijay characters name in master, vijay sethupathi name in master movie, vijay master

vijay, vijay sethupathi, what is vijay characters name in master movie, விஜய், விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர், vijay characters name in master, vijay sethupathi name in master movie, vijay master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதியின் கதா பாத்திரங்களின் பெயர் கசிந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாநகரம், கைதி என இரண்டு படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அந்தப் படத்தைப் பற்றி வெளியாகும் செய்திகள் எல்லாமே விஜய் ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

அண்மையில், மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதியின் பேச்சு சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி இருந்த நிலையில், இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கும் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர், ஜான் துரைராஜ் அகா ஜேடி என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் அவர் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பொலக்கட்டும் பர பர என்ற பாடல் மூலம் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரப் பெயர் பவானி என்று தெரிகிறது.

இப்படி மாஸ்டர் படத்தைப் பெற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Actor Vijay Vijay Sethupathi Master
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment