விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். கோபி ஆசைப்பட்டதை நான் செய்ய வேண்டும் என்று பாக்கிய எடுத்துள்ள முடிவு சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா எடுத்த அதிரடி முடிவுகளும் அதன்பிறகு கோபி குடும்பத்தினர் நடந்துகொண்ட விதமும் பரபரப்பின் உச்சமாக இருந்தது
தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட பாக்கியா, மீண்டும் வருவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இனியாவின் சோகத்தை கண்டு பாக்கியாவை சமாதாப்படுத்த கோபி புறப்பட்டார் ஆனால் அங்கு பாக்கியா கேட்ட சத்தியத்தை செய்யும்போது ராதிகாவின் பெயரை சொல்லி மாட்டிக்கொண்டார். இதனால் பாக்கியாவை அழைக்காமல் கோபி ஏமாற்றத்துடன் சென்றுவிட்டார்.
இதனிடையே தற்போது குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், எழிலுடன் வீட்டிற்கு வரும் பாக்கியா நான் ட்ரெஸ் மாத்தனும் என்று சொல்லி கோபியை அறையில் இருந்து வெளியே அனுப்புகிறார் அதன்பிறகு புதிய சேலை அணிந்து வரும் பாக்கியா, வாங்க கோர்ட்டுக்கு போலாம் என்று கூறி கோபிக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.
இதை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விவாகரத்து எல்லாம் கோபி முட்டாள் தனமா செய்த வேலை இனிமேல் அவன் அப்படி பண்ணமாட்டான் என்று ஈஸ்வரி சொல்ல, நீங்க உங்க புள்ளைய ரொம்ப நம்புரீங்க அத்தை என்று சொல்லும் பாக்கியா கோர்ட்டுக்கு நேரமாச்சு என்று சொல்கிறார்.
அதுவரை அமைதியாக இருந்த கோபி. என்ன பாக்கியா என்ன திமிரு காட்ரியா? என்மேல ரிவேஞ்ச் எடுக்குறீயா என்று கேட்க, அப்படியல்லாம் இல்லங்க எத நம்புனனோ அது இல்லங்கிர இடத்துல நின்னு பேசுரதுக்கு எதுவுமு இல்லிங்க. நான் இந்த வாழக்கையில் இருந்து விலகிடலாம்னு இருக்கேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“