Advertisment

’லியோ’ சிறப்பு காட்சியைப் பார்த்த விஜய்; லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டு

லியோ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் விஜய்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை பாராட்டியதாக தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Leo Poster

லியோ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் விஜய்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை பாராட்டியதாக தகவல்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ, ஆயுதபூஜை சமயத்தில் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. இந்தநிலையில், நடிகர் விஜய் லியோ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார்.

Advertisment

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகியுள்ள படம் லியோ. முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. 15 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார்.

இவர்கள் தவிர அர்ஜுன் சர்ஜா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், அக்டோபர் 19, 2023 அன்று திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து, லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே போஸ்டர் வெளியீடுகளுடன் விளம்பர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், விஜய் சமீபத்தில் தனது லியோ படத்தை பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சிறப்புக் காட்சியில் விஜய் லியோ படத்தைப் பார்த்தார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் ரீ-ரெக்கார்டிங் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இறுதிப் பிரதி இன்னும் தயாராகவில்லை என்றாலும், தனது பகுதிகளுக்கு டப்பிங் செய்து முடித்த பிறகு படத்தைப் பார்க்க வேண்டும் என்று விஜய் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறப்பு காட்சியைப் பார்த்த விஜய், முழுமையாக ஈர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை பார்த்த விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தை பாராட்டியதாக கூறப்படுகிறது. படத்தின் இறுதிப் பிரதி தயாரானதும் விஜய் தனது குடும்பத்துடன் மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் எதுவும் லியோ தயாரிப்பாளர்களால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment