Advertisment

விஜயுடன் இணைந்த பிக் பாஸ் கவின்: தளபதி 65 பூஜை கோலாகலம்

Cinema news in Tamil, Vijay65 starts, Biggboss kavin joins with Team: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 65-வது திரைப்படம் #Vijay65 இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிக்பாஸ் கவின் நடிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
விஜயுடன் இணைந்த பிக் பாஸ் கவின்: தளபதி 65 பூஜை கோலாகலம்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 65-வது திரைப்படம் #Vijay65 இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் உடன் விஜய்க்கு இது நான்காவது திரைப்படம்.

Advertisment

நயன்தாரா ஹீரோயினாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் ‘டாக்டர்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மே மாதம் ரிலீஸ்க்குகாக காத்திருக்கிறது.

இதற்கிடையே நெல்சன் மூன்றாவது படமாக விஜய்-65 படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் ஒரு சில நாட்களும், தேர்தலுக்கு பின்னர் வெளிநாடுகளிலும் படபிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்சனுடன் மூன்றாவது முறையாகவும் அனிருத் இசையமைப்பாளராக இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜயின் ‘கத்தி’ ‘மாஸ்டர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.

 இப்படத்தில் தமிழில் ‘முகமூடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளார். பூஜா தமிழில் இரண்டாவது படமாக இதில் நடிக்கவுள்ளார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிக்பாஸ் கவின் நடிக்க உள்ளார். இவர் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர். பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துக்கொண்டதன் மூலம் அனைவருக்கும் அறிமுகியுள்ளார். இன்று அவரும் படபூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்.

 ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

பட பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், ஹீரோயின் பூஜா ஹெக்டெ மட்டும் கலந்துகொள்ளவில்லை. வேறொரு படபிடிப்பில் உள்ளதால் கலந்துக்கொள்ள முடியவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anirudh Vijay Biggboss Kavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment