Advertisment
Presenting Partner
Desktop GIF

தமிழ் இயக்குனர்கள் எனக்கு நல்ல கேரக்டர்கள் தரவில்லை : மஞ்ஜூம்மேல் பாய்ஸ் நடிகர் வேதனை

மஞ்ஜூம்மேல் பாய்ஸ் படத்தில் துணை வேடத்தில் நடித்துள்ள விஜய் முத்து, கடந்த 32 ஆண்டுகளாக திரையுலகில் தான் அனுபவித்து வரும் போராட்டங்கள் குறித்து பேசினார்.

author-image
WebDesk
New Update
Manjummel Boys Vijay Muthu

மஞ்ஜூம்மேல் பாய்ஸ் பற்றி நடிகர் விஜய் முத்து உருக்கமாக பேசியுள்ளார்.

சமீபத்தில் வெளியான மலையாள படமாக மஞ்ஜூம்மேல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில, இந்த படத்தில் நடித்த தமிழ் நடிகர் விஜய் முத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisment

சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான படம் மஞ்ஜூம்மேல் பாய்ஸ். மலையாளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ் திரையுலகிலும் வரவேற்பை பெறும் ஒரு படமாக உருவெடுத்துள்ளது. சினிமா விமர்சகர்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆங்கிலத்தில் படிக்க : Vijaya Muthu breaks down when asked about appreciation for his role in Manjummel Boys: ‘Tamil directors didn’t give me good roles’

கடந்த 2008-ம் ஆண்ட கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்பதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தமிழ் நடிகரான விஜய் முத்து போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். பல தசாப்தங்களாக திரையுலகில் ஒரு திருப்புமுனையைப் பெற போராடி வரும் இவருக்கு மஞ்ஜூம்மேல் பாய்ஸ் திரைப்படம் அடையாளத்தை கொடுத்துள்ள நிலையில், இது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்,  ஒரு உணர்ச்சிகரமான தருணத்தில், கண்ணீர் சிந்தினார். இந்த படத்திற்கு எனக்கான அங்கீகாரம் இதயத்திலிருந்து வருகிறது. கல்விக்குப் பிறகுதான் எல்லாரும் இண்டஸ்ட்ரிக்கு வருகிறார்கள், என்னுடைய திரையுலகப் பயணம் 12 வயதில் தொடங்கியது. அது ஒரு போராட்டம். நான் நிறைய இழந்துவிட்டேன். “நான் நல்ல கேரக்டர்களை கேட்ட இயக்குனர் இல்லை. எல்லாருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.

நல்ல கேரக்டர்களுக்காக கெஞ்சினேன். ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது எங்கிருந்தோ ஒரு மலையாளி டைரக்டர் அதைத் தர வந்திருக்கிறார். என்னைக் காப்பாற்றிய அனைத்து மலையாளிகளுக்கும் மற்றும் அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள் என்று விஜய் முத்து கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்கும் தருணத்தில், எனது நடிப்பால் நான் என்ன சாதித்தேன் என்பதை அறிய விரும்புகிறேன். நான் எவ்வளவு சம்பாதித்தேன் என்பது முக்கியமில்லை. நான் இந்த இடத்திற்கு வந்து 32 வருடங்கள் ஆகிறது. இது ஓரிரு நாட்கள் மட்டுமல்ல. சினிமா எனக்கு வாழ்வாதாரத்தையும், என் குழந்தைகளுக்கு கல்வியையும் கொடுத்தது, ஆனால் இதுவரை என் கனவுகளை என்னால் நனவாக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் குணா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் டெவில் கிச்சன் என்ற குகையில் நடைபெற்றது, இந்த படத்திற்கு பின் அந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்பட்டது. அந்த இடத்தை நடந்த உண்மை சம்பவம் தான் மஞ்ஜூம்மேல் பாய்ஸ் திரைப்படம். கமல்ஹாசன் சமீபத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment