மகன் கல்யாணத்திற்காவது கேப்டன் அழைப்பாரா? எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்

விஜயகாந்தின் மகன்கள் அவரது அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

By: December 9, 2019, 11:35:06 AM

Captain Vijayakanth : கேப்டன் விஜயகாந்தின் வீட்டில் இது திருமண மணிக்கான நேரம் போல் தெரிகிறது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான இவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்தவரான விஜய பிராபகரனுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

மணமகளின் பெயர் கீர்த்தனா என்றும் அவர் கோயம்புத்தூரில் முத்திரை விற்பனையாளர் இளங்கோவின் மகள் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. விஜய பிரபாகரன் – கீர்த்தனா ஆகியோரின் நிச்சயதார்த்த படங்களும், இரு குடும்பங்களும் இவர்களை வாழ்த்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிச்சயதார்த்தம் தனிப்பட்ட முறையில் நடந்ததாகவும், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்தின் மகன்கள் அவரது அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இதற்கிடையில், உடல்நிலை காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்து வருகிறார் விஜயகாந்த். அதோடு, மகன் திருமணத்திற்காவது கேப்டன் தங்களை அழைப்பாரா என காத்திருக்கிறார்கள் தேமுதிக உறுப்பினர்கள். இருப்பினும் விஜய பிரபாகரன் – கீர்த்தனா திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijaya prabhakaran engaged with keerthana captain vijayakanth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X