Advertisment

மகன்கள் பாச முத்தம்... பக்கத்தில் பிரேமலதா... விஜயகாந்த் வைரல் போட்டோஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்தநாள் விழா; விஜயகாந்துக்கு முத்தம் தரும் மகன்கள்; வைரல் போட்டோஸ்

author-image
WebDesk
New Update
Vijayakant

Vijayakant Son Bithday

Vijayakant latest photo with his family goes viral: கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனின் பிறந்த நாளில், மகன்கள் இருவரும் அவருக்கு முத்தங்களை வழங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். திரைத்துறையில் எல்லோராலும் விரும்ப்படும் விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராக இருந்துள்ளார்.

publive-image

பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி பொது வாழ்விற்குள் நுழைந்தார். முதலில் எம்.எல்.ஏ அடுத்து எதிர்கட்சி தலைவர் என அரசியலிலும் உயர்ந்தார்.

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருக்கும் விஜயகாந்த், பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்பதில்லை. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவரது கம்பீரமான பழைய முகம் இல்லாமல், உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: கதிர் பேச்சை கேட்காத கயல் பாப்பா… அதுக்காக இப்படியா மிரட்டுறது?

publive-image

இந்தநிலையில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் விஜயகாந்த் தனது மகனுக்கு கேக் ஊட்டி விடுகிறார். இந்த நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்தும் அருகில் நிற்கிறார். பின்னர் இரண்டு மகன்களோடு சேர்ந்து நின்று போஸ் கொடுக்கிறார் விஜயகாந்த். அவரது இரண்டு மகன்களும் அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் மெலிந்திருந்தாலும், அவரிடம் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல், புன்னகையோடு பிறந்தநாளை கொண்டாடியிருப்பது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜயகாந்த், பொதுவெளியில் வராத நிலையில், அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக எனர்ஜியாக இருக்கும் இந்த புகைப்படங்களை தேமுதிக தொண்டர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment