விஜயகாந்த் – பாக்யராஜ் கூட்டணியில் வெளியான சொக்கத்தங்கம் படத்தில் கமிட் ஆகி அட்வான்ஸ் வாங்கிக்கொண்ட நடிகர் வடிவேலு கடைசிவரை டேட் சொல்லாமல் இருந்தாகவும், படத்தில் கமிட் ஆகி நடித்த செந்தில் கடைசி நேரத்தில் பிரச்சனை செய்ததாகவும், உதவி இயக்குனரும் நடிகருமான செம்புலி ஜெகன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் சொக்கத்தங்கம். சௌந்தர்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். சொக்கத்தங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகரும் உதவி இயக்குனருமான செம்புலி ஜெகன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் செனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், சொக்கத்தங்கம் படம் கமிட் ஆகும்போது நாயகியாக சௌந்தர்யா மட்டும் தான் ஃபிக்ஸ் ஆகியிருந்தார். அதன்பிறகு விஜயகாந்த் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கமிட் ஆனார்கள. இந்த படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு கமிட் ஆகி அவருக்கு ரூ3 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசிவரை அவரு டேட் கொடுக்கவே இல்லை.
படக்குழு பொருந்திருந்து பார்த்தபோதும் அவர் எவ்வித தகவலும் தெரிவிக்காததால், அடுத்ததாக கவுண்டமணியிடம் பேசினார்கள். அதன்பிறகு அவதே செந்திலிடம் பேசி இருவரும் ஒன்றாக இந்த படத்திற்கு கமிட் ஆனார்கள். படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. டப்பிங் பேசும்போது, தனக்கு சம்பளம் முழுவதும் வரவில்லை என்று கூறி செந்தில் டப்பிங் பேச முடியாது என்று சொல்லி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஒரு கட்டத்தில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதை தொடர்ந்து வடிவேலுவிடம் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வாங்கி செந்திலிடம் கொடுத்தபோது, அவனுக்கு அட்வான்சே 3 லட்சம் ஆனா எனக்கு சம்பளமே 3 லட்சம் தானா அவன் என்ன என்ன விட பெரிய ஆளா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அவரை சமாதானம் செய்ய போகும்போது இது என்ன டைரக்டர் பாக்யராஜ் சொந்தபடமா ஃபிரியா வந்து நடிச்சி குடுத்திட்டு போறதுக்கு என்று கேட்டார்.
அதன்பிறகு பலகட்ட முயற்சிக்கு பின் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு அவர் வந்து டப்பிங் பேசி முடித்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று செம்புலி ஜெகன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“