தமிழ் சினிமாவின் ஒரே கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த், உடல் நலக்குறைவால் சில வருடங்களாக சினிமா, அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார்.
Advertisment
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை அருகே பிறந்த விஜயகாந்த், 70களின் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடிகராக நுழைந்தார். தொடர்ந்து 80 களின் நடுப்பகுதியில், ஒரு அதிரடி ஹீரோவாக விஜயகாந்த் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
1990-ல் பிரேமலதாவை மணந்த அவருக்கு, விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தேமுதிகவின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது முதன்முதலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், சென்னை, உட்பட சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகியது அதில் விஜயகாந்த் டீசர்ட், பேண்ட் உடன், உடல்மெலிந்த தோற்றத்தில்’ நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள்’ கேப்டனுக்கு என்ன ஆச்சு என’ அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விஜயகாந்தின் நண்பரான ராதாரவி’ பிஹைன்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்’ புகைப்படத்தை பார்த்து நான் மனமுடைந்து அழுதுவிட்டேன். என் நண்பர் போட்டோ அனுப்பி இவர் யார்னு தெரியுதா கேட்டார். நான் போன் பண்ணி தெரியலைப்பா சொன்னேன். அவர் விஜயகாந்த் சொன்னதும் ஆடிப்போயிட்டேன். எனக்கு மனசு தாங்கல.. இவ்ளோ வருஷன் கூட பழகிருக்கேன். எனக்கு அடையாளம் தெரியலைங்கிறது தான் வருத்தம்.
விஜயகாந்தை பார்க்க முயற்சி பண்ணேன். சுதீஷுக்கு போன் பண்ணேன், மெசெஜ் கூட அனுப்பினேன்.. ஆனா, அவர்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல. விஜயகாந்த் மகன் பிரபாகர் கிட்ட கேட்டேன். ஆனா, அவுங்க அம்மாகிட்ட கேட்டு சொல்றேன் சொல்லிட்டாரு. அவரை பாக்க விடமாட்றாங்கனு ராதாரவி கண்கலங்கி பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராதாரவி பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“