Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.
இன்றும் தினசரி அவரது நினைவிடத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் ராதாரவி, நாசர், சரத்குமார், கமல்ஹாசன், ரகுமான், நடிகை ரித்திகா உள்ளிட்ட பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சரத்குமார் மேடையில் பேசுகையில், “இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டம், இதில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.
புலன் விசாரணை திரைப்படத்திற்கு வில்லனாக நடிக்க வந்து போது, என்னை பார்த்து இவர் மீசை இல்லாமல் எப்படி இருப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு நிமிடத்தில் மீசை இல்லாமல் நான் விஜயகாந்தை சந்தித்தேன். இப்போது மீசையில்லாமல் அவரோடு நினைவேந்தல் நிகழ்ச்சி பங்கேற்றுள்ள சூழல் ஏற்பட்டுவிட்டது வருத்தமளிக்கிறது.
புலன் விசாரணை படத்தில் உங்களுக்கு தான் முதல் பெயர் என்று சொன்னார். இது போல் யாரும் பெருந்தன்மையாகத் தன்னை விட்டு கொடுக்க மாட்டார்கள்.
விஜயகாந்தைப் பற்றி மூன்று நிமிடம் பேச சொன்னார்கள். ஆனால் அவரைப் பற்றி மூன்று தலைமுறைக்கு கூட பேசலாம். 2000-2006 வரை நடிகர் சங்கத்தில் அவருடன் நான் பயணித்துள்ளேன்.
வடிவேலு வரவில்லை என்ற குற்ற சாட்டுகள் தொடர்ந்து வந்தது. அவர் வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்த் நினைத்துப் பார்த்து அழுது இருக்கலாம். ஒரு வேளை வந்திருந்தால் திட்டுவார்கள் என்று வடிவேலு நினைத்திருக்கலாம். மறப்போம் மன்னிப்போம் என்று குணம் படைத்தவர் விஜயகாந்த். வடிவேலுவை நிச்சயம் மன்னித்து இருப்பார்.
தமிழ் சமுதாயம் உள்ள காலம் வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. விஜயகாந்தின் ஆன்மா நடிகர் சங்கத்தையும் தமிழ் சமூகத்தையும் ஆசிர்வதிக்கட்டும்”, இவ்வாறு அவர் பேசினார்.
புலன் விசாரணை திரைப்படத்திற்கு வில்லனாக நடிக்க வந்து போது, என்னை பார்த்து இவர் மீசை இல்லாமல் எப்படி இருப்பார் என்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு நிமிடத்தில் மீசை இல்லாமல் நான் விஜயகாந்தை சந்தித்தேன். இப்போது மீசையில்லாமல் அவரோடு நினைவேந்தல் நிகழ்ச்சி பங்கேற்றுள்ள சூழல் ஏற்பட்டுவிட்டது வருத்தமளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“