New Update
/
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் மகள் அனிதாவின் மகள் திருமணத்தயொட்டி, அவர்களுடைய வீடு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்களால் கலைகட்டி இருக்கிறது.
தற்போதைய தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் என 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமார் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாமல், டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கு 1969ம் ஆண்டு முத்துக்கன்னு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், நடிகர் விஜயகுமார் 1976-ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார்.
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.
விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக இருக்கிறார். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரின் மகளுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், அனிதா விஜயகுமார் மகள் தியாவின் திருமணம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
திருமணத்தை முன்னிட்டு அனிதா விஜயகுமார் வீடு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சுற்றமும் நட்பும் சூழ வீடு விழாக்கோலம் பூண் கலைகட்டியுள்ளது.
அனிதா விஜயகுமார் தனது மகள் தியாவின் திருமணத்துக்காக வீட்டில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அனிதா விஜயகுமார் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களின் வாழ்த்துமழையைப் பெற்று வைரலாகி வருகிறது.
அனிதா விஜயகுமார் தனது மகள் திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: “ஒவ்வொரு தாயின் கனவும் தன் மகள்களின் திருமணம்தான். கடந்த சில மாதங்களாக இவ்வளவு திட்டமிடல்.. என் இளவரசியின் கொண்டாட்டங்களை ஆரம்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாதங்களில் எனது ஆதரவு அமைப்பு, எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனது தூண்களாக இருந்தனர்.
உங்கள் அனைவரின் ஆசிகளும் வேண்டும் 🙏.கடவுள் @diya.diaries
😘இந்தப் பதிவு எங்கள் வீட்டில் பந்தக்கல் பூஜைக்காக நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அலங்காரம் செய்த @geetu_sangக்காக.
ஒவ்வொரு விவரமும் சரியாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த இரவு முழுவதும் அவளே இருந்தபோது அவளுடைய அர்ப்பணிப்புக்கான அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
லவ் யூ கீதுமா😘
#எங்கவீட்டுகல்யாணம்
#DiyasDill” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.