Advertisment

ஒரு கல்யாணம் ஊரெல்லாம் பேச்சு; விஜயகுமார் பேத்தி திருமணத்தில் செய்த வேலை; குடும்பத்தினர் நெகிழ்ச்சி

நடிகர் விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்தில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
diya marriage

நடிகர் விஜயகுமாரின் மகள்  அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமணம் photos: Instagram

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரே கல்யாணம் ஊரெல்லாம் பேச்சு என்றால் அது நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் தான். நடிகர் விஜயகுமாரின் மகள்  அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமணம் திங்கள்கிழமை கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.

Advertisment

சென்னையில் மிக ஆடம்பரமாக நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தி திருமணத்துக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் விஜயகுமார் தனது பேத்தி தியா திருமணத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்று திருமண வேலைகளையும் முன்னின்று செய்துள்ளார். விஜயகுமார் வீட்டு திருமணத்தில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து விஜயகுமாரின் மகள் அனிதாவின் நெருங்கிய தோழி யூட்டியூப் சேனலில் பேசி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விஜயகுமாரின் குடும்பத்தில் மகன், மகள்கள் என பலரும் நடிகராக இருந்தாலும், அவருடைய இரண்டாவது மகள் அனிதா திரைத்துறையைத் தேர்வு செய்யாமல் படித்து டாக்டராகி இருக்கிறார். 

Anitha Vijayakumar Family

அனிதா தன்னோடு படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் புது வீடு வாங்கி குடிபோயுள்ளார். அதே நேரத்தில், தனது மகள் தியாவின் நிச்சயதார்த்தத்தையும் நடத்தினார். 

அனிதாவின் மகளும் ஒரு டாக்டர், அவர் லண்டனில் படிக்கும் போது அவருடன் படித்த தீலன் என்பவரை காதலித்தனர். இவர்களுடைய காதலுக்கு இருவிட்டாரும் பச்சைக்கொடி காட்ட திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. 

vijayakumar grand daughter diya wed



விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்தில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. தியாவின் வீட்டில் திருமணத்துக்காக இரண்டு நாள் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. முதல் நாள் மெஹந்தி பங்க்ஷனில் அவர்களுடைய வீட்டைச் சார்ந்த பெண்களுக்கு மெஹந்தி போடப்பட்டிருக்கிறது. அப்போதே 100 பெண்களுக்கு மேல் வந்திருந்தார்களாம். திருமணத்துக்கு நிறையே பேர் வருவார்கள் என்பதால், ஃபங்ஷனை இரண்டு நாள் நடத்த வேண்டும் என்று விஜயகுமார்தான் கூறியிருக்கிறார். காரணம் முதல் நாள் வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் மெஹந்தி போட்டு விட்டால் பிறகு உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் வரும்போது அவர்களை வரவேற்பதற்கு எளிதாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். ஆனால், இதை கடைசி நேரத்தில் திட்டமிட்டதால், கொஞ்சம் பேருக்கு தகுந்த மாதிரி இடத்தை அலங்காரம் செய்யுங்கள் என்று அனிதா விஜயகுமார் கூறியிக்கிறார்.

diya

ஆனால், விஜயகுமார், அனிதா குடும்பத்தினர் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பு, அங்கு ஆட்களை வைத்து பிரம்மாண்டமாக அலங்காரம் செய்திருக்கிறார். ஒரு பெரிய ஊஞ்சல், அதன் அருகே மரத்தில் வண்ண வண்ண விளக்குகள் எல்லாம் ஒளிர விட்டு தன்னுடைய பேத்தி மீதான அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அனிதாவின் மகள் மணப்பெண் தியா, துபாயில் வளர்ந்து, லண்டனில் படித்திருந்தாலும், விடுமுறைக்கு வரும்போது, தனது தாய்மாமா அருண் விஜய் உடன்தான் நேரத்தை செலவிடுவாரம். அதனால், குழந்தையாக பார்த்து வளர்ந்த அக்கா மகள் தியாவை மணக்கோலத்தில் பார்க்கும்போது அருண் விஜய் நெகிழ்ச்சியில் கண்கலங்கி போனாராம். 

அதே போல, தியா சங்கீத் பங்க்ஷனில் மேடையில் பேசும்போதும் தன்னுடைய தாய் மாமா அருண் விஜய் மீது தனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த அருண் விஜய் நெகிழ்ச்சியில் அழுதுவிட்டார் என்று விஜயகுமாரின் மகள் அனிதாவின் தோழி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arun Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment